மேல இருக்குற  வீடியோ Youtube யில் கிடைத்தது. ஓடி கொண்டிருக்கும் தெய்வ திருமகள் படத்தின் ஒரு பாடல் போல் இருக்கிறது. அதாவது இந்த பாடல்தான் (The good old robinhood cartoon theme song)  தெய்வதிருமகள்  பாடலுக்கு "Inspiration"என்று வைத்துகொள்ளலாம். ரெஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், பிரகாஷ்குமார் செய்தால்   அதற்க்கு பெயர் "INSPIRATION". அதுவே தேவா செய்தால் "COPY". தேவாவை COPY COPY என்று சொல்லி அவர் தந்த சில அருமையான மெலடி பாடல்களை கூட COPYஎன்று நாம் கருதினோம்."கொஞ்ச நாள் பொறு தலைவா",மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்"போன்ற பாடல்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.இப்ப இருக்கும் எல்லா இசைஅமைப்பாளர்களும் "Smell","Inspiration" என்று சொல்லிக்கொண்டு ஆங்கில பாடல்களை சுட்டுக்கொண்டுதான் இருகிறார்கள். பூக்கள் பூக்கும் தருணம் போன்ற எவர்க்ரீன் மெலடி தந்த G.V பிரகாஷ்குமாரிடம் சொல்ல  விரும்புவது,  நீங்கள் சொல்வது போலவே Inspired ஆகி செய்தாலும், உங்களது மற்ற நல்ல பாடல்களையும் ,Background scoreரையும்  Copy என்று நினைக்கும்படி செய்துவிடாதீர்கள்.
இனிமேலாவது எங்கள் இளையராஜாவுடன் எந்த இசை அமைப்பாளரையும் ஒப்பிடாதீர்கள். 



இளையராஜா!!!!!!

இந்த ஒரு சொல் தமிழ்நாட்டு இசையில் ஏற்படுத்திய தாக்கத்தை எதோ இந்த கட்டுரையில் அடக்க முடியும்னா congress நிச்சயம் 2011 தேர்தல தமிழ் நாட்டுல ஆட்சிய பிடிச்சுடும் ??? ?.உன்னை பத்தி எதாச்சும் சொல்லனும்னா எங்க ஆரம்பிக்கிறது எங்க முடிக்கிறது எதுவும் தெரியாம தான் எழுத போறன். என்ன எழுதுறது உன்ன பத்தி ?? உன் இசையை நான் கேட்டு வளர்ந்தவன் இல்லை சுவாசித்து வளர்ந்தவன்,(ரொம்ப இலக்கிய நடையா போகுதோ ??? வேணாம் பாவம் படிக்கிறவங்க).

தமிழ் நாட்டு இசையில் இரு பிரிவினர்கள் இருகிறார்கள்,ஒன்று உன் ரசிகர்கள்,இரண்டு உன் ரசிகர் இல்லை என்று பொய் சொல்லுபவர்கள். உலக இசையை இப்போது தமிழ்நாட்டில் அறிமுகம் செய்கிறார்கள்,நீ தமிழ் இசையை உலகுக்கு அறிமுகம் செய்தவன்.
உன்னை பத்தி சொல்லனும்னா எந்த பாடலை சொல்லுவது,எந்த பாடலை விடுவது?இசை என்றால் என்ன என்று எனக்கு அணுஅளவும் தெரியாது,கர்நாடக கட்சேரியில் ஒரு சாரர் தலையை ஆட்டுவது தான் இசை என்று நினைத்திருந்த காலம்.நீ எனக்குள் வந்த பிறகு உன் பாடலுக்கு, அணுஅளவும் இசையை பற்றி தெரியாத நான்,என்னை போல பலர் தலையை அசைக்கிறார்கள்.
இது தான் இசை என்று, ஒரு பாமரனுக்கும் இசையை அறிமுகம் செய்தாய்.இப்பொழுது எங்களுக்கும் இசை என்றால் என்னவென்று தெரியும், அதான் உன்னை எங்களுக்கு தெரியுமே????.அன்னகிளியில் ஆரம்பித்த உன் பயணம்……….தமிழன் இருக்கும் வரை உன் பயணமும் இருக்கும்.உன்னை தவிர்த்துவிட்டு தமிழ் இசையை கேட்பது எக்காலத்திலும் முடியாது. உனது பின்னணி இசை முன்னணியில் இருந்து பல படத்திற்கு வெற்றி தேடிதந்திருக்கிறது. “ஜனனிஜனனி” பாடலை முஸ்லீம், கிறிஸ்துவர்களும்,”அல்லா உன் ஆணைப்படி” பாடலை இந்துக்களும், கிறிஸ்துவர்களும் உதடுகளில் உச்சரித்தது தேசிய ஒருமைப்பாடு.இப்படி எதை சொல்லுவது,எதை விடுவது? 1976 தொடங்கிய உன் இசை பயணத்தில் நீ பார்த்த விருதுகள் குறைவு,வேண்டாம் நீ எந்த விருதையும் பெருமை படுத்த வேண்டாம். Media exposure அதிகம் இல்லாத 1990 ஆண்டுக்கு முன்னரே நீ உன் இசை சாம்ராஜியத்தை கட்டி பால் காச்சி குடித்து விட்டாய். நீ இசை அமைப்பாளர் இல்லை நீ தான் எங்கள் இசை (correcta title எ புடிசுட்டனா).

இப்பொழுது இசை வியாபாரம் ஆகிவிட்டது ராஜா,கடைகோடியில் உள்ள சுப்பனுக்கும்,குப்பனுக்கும் இசையை கொண்டு போய் சேர்தாயே ,அதற்கு விருதுகள் குடுத்து உன்னை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.இப்பொழுது பல இசை காதுக்குள் நுழைகிறது ஆனால் உன் இசைபோல உயிருக்குள் நுழைய மறுக்கிறது,சத்தம் தான் இப்பொழுது இசையாக மாறிவிட்டது அந்த விமர்சனத்துக்கு நான் நுழைய வில்லை,உனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது ,என்னும் நிறைய நல்ல இசையை தமிழ்நாட்டு மக்கள் உன்னிடம் இருந்து எதிர்பார்கிறார்கள்


(இந்த கட்டுரை முழுவதும் உன்னை வா,போனு எழுதிருக்கன் அப்பதான் நல்லா இருக்கு இல்லன்னா இப்போது இருக்கும் பாடல்கள் போல எனக்கு நீ அன்னியப்பட்டு நிற்கிறாய்)

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator