
அப்பாவின்னு ஒரு படம் வர போகுதுங்க......படத்தோட பாட்டு வந்துருக்கு ,இசை ஜோஷ்வா ஸ்ரீதர்...அதுக்கு என்னனு கேக்குறிங்களா.... அந்த படத்துல வர "ரயிலின் பாதையில் பூக்கின்ற பூ நான்ன்னு ஒரு பாட்டு தான் இந்த பதிவு எழுத காரணமா இருந்துச்சு, இதுக்கு ஒரு பதிவானு நினைக்காதிங்க இந்த பாட்ட"ஹரிஹரன் ஸ்ரேயா கோஷல் பாடிருகாங்க...... என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார் ரகம் இந்த பாட்டு ,ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கும் அழகான மெலடி.பொதுவா டூயட் பாட்டுனா ஆண் குரல் தான் முதல்ல ஆரம்பிக்கும் ஆனா இங்க வெயில் காலத்து சில் சர்பத் மாதிரி semi classicala ஆரம்பிக்குது ஸ்ரேயா கோஷல் குரல், ஆனா பாட்டு ஜெட் ஸ்டார்ட் ஆகுறது ஹரிஹரன் பாட ஆரம்பிக்கும் போதுதான், உண்மையான காதலர்கள் பாடுற மாதிரியே இருக்குங்க.ஹரிஹரன் கேக்கணுமா அந்தர் பண்ணிருகாரு.semi classical ல ஆரம்பிச்சு full classical லா அழகா மாறுது பாட்டு, வார்த்தைகள் ரொம்ப அழகா இருக்கு எழுதுனது முத்துக்குமாரா, வைரமுத்துவா?. ஜோஷ்வா ஸ்ரீதர் கல்லூரி படத்துலேயே கவனிக்க பற்றுகணும்,கண்டிபா நல்லா இசை அமைப்பாளர் மத்தியில் அவருக்கு ஒரு இடம் உண்டு.இந்த படம் புது முகங்கள் நடிக்கிற படம் reach ஆகுறது கஷ்டம், பெரிய நடிகர் படத்துல இந்த பாட்டு இருந்துச்சுன்னா இந்த பாட்டுக்குனு ஒரு தனி ரசிகர் பட்டாளம் ஒருவாகிருக்கும்,கண்டிப்பா பாட்ட கேட்டு முடிச்சதும் ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல பாட்டு கேட்ட திருப்தி கிடைக்கும்....THANKS ஜோஷ்வா
|
பிடித்த வரிகள் :
ரயிலின் பாதையில் பூக்கின்ற பூ நான்,புயலின் நடுவிலும் பறக்கின்ற கிளி நான்.
யாரும் பாக்காமலே எல்லோரையும் பாக்கும்.
மாய உலகமிது என்னென்னவோ நடக்கும்.

ஆமாங்க உலகத்துல லட்சக்கணக்கான மொழிகள் இருக்கு.....கோடிகணக்கான வார்த்தைகள் இருக்கு.....ஆனா சும்மா கில்லி மாதிரி தமிழ் முதல் இடத்துல இருக்குங்க, எதுலன்னு கேக்குறிங்களா?? . .....கூகிள் தான் உலகம் முழுக்க அதிகம் பயன்படுத்தபடும் தேடுபொறி.அதுல உலகத்துலே அதிகம் பேர் தேடின வார்த்த நம்ம தமிழ் தாங்க.கூகிள் வெளியிட்ட தகவல் படி உலகத்துலயே அதிகம் பேர் கூகிள் தேடல்ல பயன் படுத்தின வார்த்த தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த தேடல்கள்.....இந்த வெற்றில நாம ஒருவொருக்கும் பங்கு கண்டிபா உண்டு....நாமளும் கண்டிபா ஏதாவது ஒரு தடவ தமிழ்னு கூகிள் தேடுபோரில தேடி இருப்போம்ல........ஆக இங்கயும் நாம தான் கில்லின்னு நிருபிச்சாச்சு.....கீழே இருக்க video பாருங்க....
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்......மறக்காம கிட்டிபுல்லு சின்னத்தில் ஒட்டு போட்ருங்க






