நாம் பயன்படுத்தும் winamp,mediaplayer,போல் இப்பொழுது புதிதாக பயன்படுத்தப்படும் பிளேயர் KM PLAYER.பாடல்கள் மிக துல்லியமாக கேட்கிறது.Volume controls நிறைய மாற்ற வசதி உள்ளது.ப்ளேயரில் பாடல்கள் வேறு வேறு வண்ணத்தில் வருவது பயன்படுத்துபவருக்கு புதிய அனுபவமாக இருக்கும்.மேலும் பாடல்களின் தரத்தை அதிகரிக்க நிறைய வசதிகள் உள்ளது இதன் File size 12MB,எளிதாக டவுன்லோட் செய்யகூட வகையில் உள்ளது.WINAMP மற்றும் வேறு ப்ளயேர்களை பயன்படுத்துபவர்கள் இதையும் பயன் படுத்தி பாருங்கள்.எல்லாமே ஒரு change க்கு தாங்கண்ணா

Free download option ஐ பயன்படுத்தி டவுன்லோட் செய்க



டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்குக


பிடிச்சிருந்த ஒட்டு பதிவு பண்ணுங்க.


கிட்டிபுல்லு தலைப்பில் வலை பூ உருவாக்கிவிட்டு அந்த விளையாட்டின் வரலாற்றை வைத்தே என் முதல் பதிவை இடுகிறேன்.

இந்த விளையாட்டு எங்கிருந்து தென் இந்தியாவிற்கு வந்தது என்று தெரியவில்லை.
அனால் Lippa (gioco),என்று இத்தாலியில் இந்த விளையாட்டை போல அங்கு ஒரு விளையாட்டு பழக்கத்தில் உள்ளது .
இதற்கு தேவைப்படும் இரண்டு குச்சிகள் (தண்டா,கில்லி),தமிழ் நாட்டிற்கு இது அறிமுகம் தேவை இருக்காது .இதற்கு இவ்வளவு நபர் தான் விளையாட வேண்டும் என்று விதிகளும் கிடையாது.இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவிலும்,வடக்கில் பஞ்சாப்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்,போன்ற இடங்களில் அதிகம் விளையாடுகிறார்கள். தமிழகத்தில் கிராம புறங்களில் இது தான் தேசிய விளையாட்டு.ஆனால் கிட்டிபுல்லை அடிபடையாக வைத்தே baseball, cricket போன்ற விளையாட்டுகள் வந்திருக்ககூடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
நமக்கு தெரியாத செய்தி இதற்கு International championship tournaments நடத்தப்பட்டுள்ளன என்பது.ஐந்து முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி இருக்கின்றன.,மூன்றில் பாகிஸ்தானும் இரண்டு ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமமாக முடிந்துள்ளது.

விதிகள்
ஒரு ஒரு இடங்களில் இந்த விளையாட்டில் விதிகள் திருத்தி விளையாட படுகின்றன.பெரிய செலவு செய்து எதுவும் வாங்க தேவை இல்லை இரண்டு குச்சி செய்தால் இந்த விளையாட்டு ரெடி.அதுவும் சுவாரசியமான விளையாட்டு.

இதன் மற்ற மொழி பெயர்கள்:

கில்லி-தண்டா-தேவநாகரி.
டங்குளி - பங்களாதேஷ்.(பங்களா)
சின்னி-தண்டு-கர்நாடகா.(கன்னடா)
விட்டி-தண்டு-மகாராஷ்டிரா.(மராத்தி)
கிட்டிபுல்லு-தமிழ்.
கூட்டி-பில்லா-ஆந்திரா.(தெலுங்கு)
லப்ப-துக்கி-பஷ்டோ.

விளையாடப்படும் இடங்கள் :இந்தியா(குறிப்பாக தென் இந்தியா),பாகிஸ்தான்(பஞ்சாப்),இத்தாலி,அமெரிக்கா(பீ-வீ),பிலிப்பைன்ஸ்(சயடோங் )மற்றும் சில ஐரோபிய நாடுகள்.

நம்ம சச்சின் டோனி மாதிரி உள்ள கிட்டிபுல்லு "SUPERSTARS":

இந்தியா
வருன்,அஜய்,ரோகித்மிஸ்ரா(IIT,Bhuvaneshwar,மாணவர்),விஜய் சௌதரி,விவேக் பரன்வல்,உபேந்தர் குமார்,சந்தீப் பிரகாஷ் .
பாகிஸ்தான்:
நூர் கான்,அப்துல்ஹமீது, நதீம் ஜமீல்,அஸேம் சித்திகி

மெதுவாக மறந்து வரும் கிரிக்கெட்டிற்கு முன்னோடியான இந்த விளையாட்டை கிராமத்து இளையர்கள் தான் முற்றிலும் அழிந்து விடாமல் ஏதோ விளையாடி வருகிறார்கள்.உங்களுக்கு இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் இருந்தால் இங்கு பதிவு செய்யுங்கள்.

கிட்டிபுல்லு -ஆட்டோகிராப்



(நிறைய எழுதனும் ஆச மட்டும் இருக்கு,அந்த ஆசையா பகிர தான் இந்த தளம்.இனிமேல் எழுத வேண்டும் என்ற விபரித எண்ணம் உள்ளுக்குள் இருக்கிறது.இங்கு கேபிள் ஷங்கர்,வேலன்,ஜீவன்,லோஷன் ஜாகி சேகர்,பாரதி,ராஜா(அவீங்க),தங்கமணி(சிந்தனி),மாதவராஜ் என்று (பெயர்கள் விடு பற்றிருந்தால் மன்னிக்கவும்)கலக்குற எழுத்தாளர்கள் இருகிறார்கள் .சரி அறிமுகம் முடிச்சது.நிறைய எழுதுன படிக்கச் bore அடிக்குமே ........(கூகுள்ல bore நு அடிச்சா போர் நு வருது அதான் அப்படியே விட்டுடன்.))

கிட்டிபுல்லு விளையாட அழைக்கிறேன்.
உங்கள் மறுமொழியை எதிர்பார்த்து


அப்படை தோற்கின் இப்படை வெல்லும்
தமிழ்...

.

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator