5

தமிழ் செம்மொழி பாடல் டவுன்லோட் செய்ய




தமிழ் செம்மொழி மாநாட்டுகாக A.R ரெஹ்மான் இசை அமைத்த பாடலை இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



Right click செய்து

இதை கிளிக் செய்யுங்கள்


இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் தமிழ் மணம் மாறாமல் கலக்கி இருப்பாரே.இளையராஜா தவிர்த்து ரெஹ்மானிடம் இசை அமைக்க கேட்டு கொண்டதிற்கு ஆஸ்கார் வாங்கியது மாட்டும் தான் காரணமா என்று தெரியவில்லை ,ரெஹ்மான் பாடல்கள் வழக்கம் போல் கேட்க கேட்க தான் பிடிக்கும் .....அதற்கு இந்த பாடலும் விதிவிளகில்லை.பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது.கேட்டு விட்டு சொல்லுங்கள்.

பாடல் வரிகள் 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே யாவரும் கேளீர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றே என
உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்…

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்…

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்…

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம் மொழி – நம் மொழி – அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்…

தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம்
தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
செம்மொழியான தமிழ் மொழியாம்

Do you like this story?

5 comments

  1. செம்மொழி பாடலில் ராப் இசையை சேர்த்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது .
    உங்கள் மேலான கருத்துக்கு நன்றி. உங்களுடைய இந்த கருத்தே சில நாட்களுக்குள் மாறுவதற்கு சாத்தியமுண்டு.

    தமிழே தெரியாத என் நண்பனொருவன் இந்த பாடலின் இசை மிகவும் நன்றாக இருப்பதாக சொல்லி பாராட்டினான்.பாடலின் பொருள் என்ன என்று கேட்டான் நானும் எனககுத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னேன் . அதையும் பாராட்டினான்.

    நாம் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருப்பதை விட்டு விட்டு "திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதனை வணக்கம் செய்தல் வேண்டும்" என்று மகாகவி பாரதி சொன்னதை உண்மையாக்க வேண்டும். உலக அளவில் நம் பார்வையை விரிவாக்கவேண்டும் . உலகமே விரும்பி கேட்கும்படி இசையை குழைத்துக் கொடுக்க வேண்டும். அதைத் தான் ரகுமான் செய்திருக்கிறார்.

    ரகுமானின் இந்த திறமையால் தான் சிவாஜி படத்தில் வரும் "பல்லேலக்கா " பாடலை இன்று வெள்ளைக்காரகள் குழு இசையில், மொழி தெரியாமலே பாடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கான ஆதார வீடியோவை கீழ்க் கண்ட இணைப்பில் தயவுசெய்து காண்க:

    http://www.youtube.com/watch?v=j5Lar77VJzI

    ReplyDelete
  2. Anonymous04 June, 2010

    இளையராஜா தமிழ் இசையை உலகுக்கு அறிமுகபடுத்தியவர்,ரகுமான் உலக இசையை நமக்கு அறிமுகபடுத்தியவர் .இளையராஜா இசை தமிழ் இசையாக இருப்பதால் அவர் இசை அமைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
    தமிழ் மொழி மாநாடு பாடல் என்றால் எல்லோரும் இந்நேரம் முணுமுணுக்க தொடங்கிருக்க வேண்டாமா? ஜெய் ஹோ ,தாய் மண்ணே வணக்கம் பாடல்கள் செய்ததை இந்த பாடல் செய்ய தவறிவிட்டது.

    என் வலைப்பூ வந்து கருத்து தெரிவித்ததற்கு நன்றிகள் கானா கபாலி ( பெயர் தெரியவில்லை )

    ReplyDelete
  3. hai friends, what a fantastic music directon for the semmozhi song.enjoy and receive the diferent type of musics .and then please dont compare the 2 music legends. they both are n believable person . now the chance for A.R.R .but, Definitely RAJA will come soon for the another
    important song

    ReplyDelete
  4. //Definitely RAJA will come soon for the another
    important song//

    I agree.
    Thanks for visiting my profile "RR Classic".

    ReplyDelete
  5. Anonymous18 May, 2013

    http://tinypic.com/r/2m4x4qt/5

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator