நிறைய பதிவர்கள் கிருஷ்ணனை பற்றி எழுதி விட்டார்கள்.இவர் ஒரு தமிழர்,நம்முடைய ஒவ்வொரு ஓட்டும் இவருக்கு விருதுக்கு மிக அருகில் கொண்டு செல்லும். ஏன் விருது வாங்க கூட வைக்கலாம்.நம்ம சினிமா செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தில் 5 சதவிதம் கிருஷ்ணன் செய்திக்கு தரலாம்.தற்போது வேகமாக வளர்ந்து வரும் பதிவர்கள் தங்களுக்கு தெரிந்த பத்து நபர்களிடம் இந்த செய்தியை எடுத்து செல்லுங்கள்.அந்த பத்து பேர் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் சொன்னால் கூட போதும்.ஈமெயில்,SMS, TWITTER, MYSPACE, FACEBOOK ,ORKUT என்று எவளவோ வழிகள் உள்ளது.orkut, Facebook பயன்படுத்துபவர்கள் தங்களின் Profile படமாக கிருஷ்ணன் படத்தை போட்டால் நாலு பேருக்கு என்னவென்று தெரியும். கிருஷ்ணன் செய்கின்ற தொண்டுக்கு மனிதம்,புனிதம்,என்று எந்த வார்த்தைகளாலும் அடைத்து விட முடியாது எல்லாத்துக்கும் மேலன்னு சொல்லலாம்.












