நம்ம நடிகர்,நடிகைங்க வாங்குற சம்பளம் தான் இது.கொஞ்சம் பெருமூச்சு வாங்கறது உண்மைதான்.அந்த பெருமூச்சுக்கு காரணம் அவுங்க கொடுக்குற மொக்க படங்கள் தான்.தமிழ் படத்த எடுக்கிற தயாரிப்பாளர நெனைச்சா பாவமாதான் இருக்கு.அவுங்க படம் எடுக்க செலவு பண்ற காசுல 80 சதவிதம் நடிகர்களுக்கு சம்பளமா போயிருது.அதுக்கு அப்புறம் அவரு என்னத்த தரமான படம் எடுக்குறது. வேட்டைக்காரன் கதைய வெளிநாட்டுல எடுத்தா அது
வில்லு,கடலுக்கு பக்கதுல எடுத்தா அது சுரானு விஜய் போயிட்டு இருகாரு. பில்லால போட்ட கோட்ட அசல் வரைக்கும் கலட்ட மாற்றாரு அஜித். அவருக்கு கோட்டு போட்டுக்கிட்டு பத்து நிமிஷ இடைவெளில ஹீரோ வசனம் பேசுனா ஸ்டைலிஷ்ன்னு நினைப்பு.ரஜினிய எடுத்துகிட்டா மசாலா படங்கலபாண்டஸி முலாம் பூசி தராரு. விஜய பதிவர் கூட்டம் கிழிக்கிற அளவுக்கு ரஜினிய தொட தயங்குறாங்க.20 வருஷமா மசாலா படம் நடிச்சவர சூப்பர் ஸ்டார் ஆகிட்டு,விஜய்ய மசாலா படம் நடிக்க குடாதுன்னு சொல்றது ,எங்கயோ இடிக்குது.
ரஜினிக்கு தமிழ்நாடு,ஆந்திரான்னு பிசினஸ் இருக்கு,விஜய்க்கு தமிழ்நாடு,கேரளான்னு பிசினஸ் நடக்குது....அதான் தயாரிப்பாளரே தேடி வந்து தராங்கன்னு சொல்றீங்க,அதே மாதிரி உங்கள தேடி வர ரசிகர்களுக்கும் நல்ல படம் தாங்கன்னு சொல்றோம். 10 வருஷமா கோடம்பாக்கத்துல ரூம் போட்டு நல்ல கதைய வைச்சுகிட்டு இருக்குறவங்கள கூப்பிட்டு கதை கேளுங்க. நல்ல கதையா இருந்துச்சுன்னா உங்க சம்பளத்த குறைச்சுகிட்டு வாய்ப்பு குடுங்க.நல்ல படமும் வரும் உங்களுக்கும் நல்ல பேரு கிடைக்கும்.அப்டி வந்தவங்க தான் பாலா,அமீர், வெற்றிமாறன்,சசிகுமார் எல்லாம்.மக்கள் விரும்புறத தான் நாங்க தரோம்ன்னு சொல்லாதிங்க, நல்ல கதை அம்சம் உள்ள படங்கல தமிழ் ரசிகர்கள் நிராகரிச்சதா சரித்திரமே இல்ல....மக்கள் மேலயும் சில தப்பு இருக்கு,அன்பே சிவம் வந்திருக்கும் பொது போய் ""தூள்"" பாக்குறது,நான் கடவுள் வரும்போது போய் ""படிக்காதவன்"" பார்த்திட்டு விஜய் ஏன் மசாலா படத்துலே நடிகிறார்னு மெசேஜ் அனுப்பு வேண்டியது.மக்களும் மாறனும்.
நடிகர்கள் நாங்க மட்டும் கோடில புரளலாம்,ஆனா எங்க ரசிகர்கள் கொடி மட்டும் தான் கட்டணும்னு நினைக்கிறது ""...............""(இந்த இடத்துல படிக்கிறவங்க என்ன வேணாலும் போட்டு நிரப்பிகிங்க) ஒரு பவுன் தங்க காசு,இதயத்தில் குடி இருக்கும் அதெல்லாம் வேணாம்,ஒரு நாள் கூலிய உங்க படைத்திருக்கு செலவு பண்ற சராசரி ரசிகன முதல திருப்தி படுத்துங்க ,இந்த படத்துல வித்தியாசமா ட்ரை பண்ணி இருக்கோம்னு சொல்றிங்க ...படம் பேரு போடறது தான் வித்யாசமா இருக்கு,வேற ஒன்னும் இல்ல.கோடில சம்பளம் வாங்கும் நடிகர்கள் எல்லோருக்கும் இது பொருந்தும்.
என்னிடமும் தமிழ் நாட்டை எப்படி உயர்தரது அப்படின்னு ஒரு கதை இருக்குது.
ReplyDeleteஆனா கதை எப்படி எழுதறது அப்படின்னு தெரியல. உங்களுக்கு தெரிந்ஜா சொல்லுங்க.... my mail id. thangaraj.skj at gmail