8

நாத்திகம் v/s ஆத்திகம்



நான் பார்த்து என் மனசு நெருடிய சம்பவம் இது.அன்று சிங்கப்பூர்லேந்து சென்னை வரதுக்காக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்துக்கு  கொஞ்சம் விரைவாகவே வந்து சேர்ந்துட்டன்.சிங்கப்பூர் விமான நிலையம் அதற்கான பரபரப்புடன் இயங்கிட்டு  இருக்கு.என்னோட பொருட்கல வெயிட் போட்டு அனுப்பிவிட்டு கைல போர்டிங் பாஸ்சோட உகாந்த்ருக்கன்.வரிசை கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகுது.


வரிசை நீளுது.அந்த வரிசைல 35 வயது மதிக்கிற ஒரு தம்பதி நிக்குறாங்க.அவங்க கூட அவங்களோட பொண்ணு,வயது 6,7 இருக்கும்.
அந்த பொண்ணுக்கு மன நலம் பாதித்தது,அந்த பெண்ணை பார்க்கும்போதே நன்றாக தெரிகிறது.(ஆங்கிலத்தில் அழகான சொல்லாடல் "Differently abled") .அந்த வரிசைல நிக்குற மக்களோட பார்வை கொஞ்சம் கொஞ்சமா அந்த பெண்ணின் மேலே போகுது.அங்க நிக்கிறவங்களுக்கு அந்த பொண்ணு Exhibition பொருளா மாறுது.

அந்த பிள்ளைய காமிச்சு அவுங்க அவுங்க குடும்பம்த்துகுள்ள எதோ பேசிகிறாங்க.அந்த தம்பதிக்கு எல்லோரும் தன் குழந்தைய பார்த்து பேசுறாங்கனு,ஒரு ரணம் கலந்த வலிய அவுங்க முகத்துல பார்க்க முடியுது,இருந்தும் மக்கள் பார்த்து பேசுறத விடல,அந்த தம்பதி தலைய கீழ பார்த்தவாரே வரிசைல நகருறாங்க .சிலபேர் அவுங்கள்ட்ட போய் அக்கரையா விசாரிகிறாங்க.அந்த பிள்ளைக்கு நம்ள பத்திதான் அப்பா அம்மாகிட்ட கேக்குறாங்கன்னு கூட தெரியல.நிறைய பேருக்கு பொது இடத்துல எப்படி நடக்கணும்ன்னு தெரில.நம்ம கேக்குற கேள்வி,பாக்குற பார்வை எவளோ வலி வாய்ந்ததுன்னு இது மாதிரி குழந்தைகள பெற்றவர்களுக்கு தான் தெரியும் .இதே மாதிரி ஒரு அனுபவம் சென்னை டு தஞ்சாவூர் ரயில் பயணத்தின் போதும்  எனக்கு ஏற்பட்டுருக்கு.என்னோட எதிர் இருகையில இருந்த மனநலம் பாதிச்ச குழந்தைய பார்த்து, அவுங்க பெற்றோரிடம் கேள்விகளாலேயே  கீறி எடுத்துட்டாங்க அங்க இருக்ரவாங்க. கண்டிப்பா அப்படி ஒரு பிள்ளைகளை திடீர்ன்னு  பாக்கும்போது நம்ம அறியாம நம் கண் அவர்கள நோக்கி போகும் என்பது இயற்கை தான். அந்த பார்வைய அந்த பெற்றோர் பாக்காத மாதிரி பார்த்துட்டு வேறு பக்கம் பார்வையை திருப்பி கொள்ளலாம்.அவர்களையே பார்த்துட்டு இருக்கிறது,இல்ல அந்த குழந்தைய பத்தி நம்ம விவாதிப்பது ......அவர்களுக்கு தெரியற மாதிரி பேசுறது .....பெரிய வலியை அவுங்களுக்கு ஏற்படுத்தும்.நம்ம பார்த்தோ, விசாரிச்சோ எந்த மாறுதலும் அந்த குழந்தைகளுக்கு வராது.மாறாக பொது இடங்களில் அந்த குழந்தைகள நாம வித்தியாசமா பாக்கலன்னு அவுங்க பெற்றோருக்கு தெரிஞ்சா,அதவிட அந்த இடத்துல அவுங்களுக்கு செய்ற பெரிய உதவி வேற ஒன்னும் இருக்காது.

கேள்வி கேக்கணும்னா எல்லாத்தையும் கடவுள் படைகிறார்னு சொல்றாங்க,அந்த கடவுள்கிட்ட கேக்கலாம்.நாத்திகம் ஆதிக்கத்தின் சட்டய பிடிச்சு கேக்குற கேள்வி இதுதான்...  "மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் உங்க கடவுள்தான் படைகிறாரா ???இந்த கேள்விக்கு  ஆத்திகம் தலைய கவிழ்ந்துதான் நிக்குது.பாவம்,புண்ணியம் ,விதின்னு மழுப்பலான பதில்  சொல்லாம சமயவாதிகளிடம் இந்த கேள்விக்கு பதில் இல்லை.நமக்கு இருக்குற மாதிரி எதிர்காலம்,லட்சியம்,திருமணம்,குழந்தைகள்ன்னு, ஒன்னும் இல்ல  இந்த மாதிரி குழந்தைகளுக்கு. ஏன் கடவுள்ன்னு ஒருத்தர் இருக்காரான்னு கூட தெரியாது அவர்களுக்கு.ஒரு வேலை இந்த மாதிரி குழந்தைகளுக்கு விபரம் வந்தால்  யார நொந்துக்குவாங்க, படைச்ச கடவுளையா,?பெற்ற பெற்றோரையா ?இல்ல அவுங்க வெளில வந்தா "Exhibition" பொருள் மாதிரி பாக்குற மக்களையா????அவங்க கைல இல்லாத ஒரு பிறப்பு,அதுவும் மற்றவர்கள் கேலியாக பார்க்க கூடிய ஒரு பிறப்பு.

முன் ஜென்மத்து பாவம்ன்னு காக்கா வட சுட்ட கதைய தவிர ஆன்மீகத்துல வேற எந்த விளக்கமும் இல்ல.அதிகம் போனா"இவர்கள் கடவுளின் குழந்தைகள்" ..பெரிய பூகம்பம்,சுனாமி,குழந்தைங்க இறந்து போறது,திருப்பதி ,பழனிக்கு போன பக்தர்கள் சாவுன்னு செய்தி கேக்கும் போது மட்டும் ஒரு நாள்  நாத்திகர்களா மக்கள் மாறிடுவாங்க.அடுத்த நாள் திருசெந்தூர்,வேளாங்கண்ணி கோயில்களுக்குள் தண்ணி வரல பாத்தியான்னு கேப்பாங்க?இது மாதிரி சால்ஜாப்பு நமக்கு  தேவபடுது,ஏன்னா நமக்கு நல்லது நடக்கணும் அதுக்கு கடவுள் துணை  இருக்கணும்னு சொல்ல பட்ட கதை.உண்மைய சந்திக்க அவ்ளோ பயம்.

கடவுள்தான் எல்லாத்தையும் படைசாருன்னா "Everything is perfect"ன்னு இருக்கனும்.Manythings are perfectன்னு இருந்தா கூட ,கடவுள் தோல்வி அடஞ்சுட்டாறுன்னு  அர்த்தம்.பெரிய கப்பல்ல குண்டு ஊசி அளவு ஓட்ட இருந்தாலும் கூட அது ஆபத்தான பயணம் தான்.வாழ்க்கையை புரிஞ்சுக்க நினைக்காம வாழ்கையை எப்படி வாழணும்னு கத்துகிட்டா நல்ல இருக்கும்.பாலாவோட அம்சவல்லி கதாபாத்திரம் ("பூஜா,நான் கடவுள்")கேட்ட கேள்விக்கு எந்த சமயத்து மதவாதிகளிடமும் பதில் இல்லை.சமயவாதிகள் கடவுள நல்ல "Business"  ஆகிட்டாங்க.நித்யானந்தா நெருப்பு வலயதுக்குள்ள தவம் இருக்குறாரு,கேட்டா இது பஞ்ச தபஸ் யோகாவாம்.மக்களும் அதையும் நம்பிட்டு போவாங்க.இப்படி கண்ட கண்ட சமயவாதிகளை நம்பி போறதுக்கு பதில், தன்னையே நம்பி இருக்குற நாத்திகன் ஆயிரம் தடவை மேல்.இன்னமும் தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துவாரு,நல்லது செஞ்சா தலைல தூக்கி வைச்சுட்டு ஆடுவாருன்னு சின்ன பிள்ளை தனமா நினைக்ரத விட்டுட்டு,இந்த மாதிரி குழந்தைகளுக்கு மக்கள் எதாச்சும் உதவி செய்யலாம்.சென்னை,திருச்சி,மதுரை போன்ற பெரிய நகரங்களில் தான் இது போன்ற மாற்று திறன் உடைய குழந்தைகளுக்கு பள்ளி உள்ளது,அதை எல்லா நடு மற்றும் சிறு நகரங்களிலும் அரசு திறக்க வேண்டும்,

நான் விமானுத்துல ஏறி அந்த தம்பதிகல தாண்டி என் இருக்கைய நோக்கி நடக்குறன் ,"Fits இவளுக்கு டெய்லி வருமா வந்தா என்ன பண்ணுவீங்க ,பக்கத்துக்கு சீட்டு  நண்பர் அந்த தம்பதிகளிடம் அக்கறையோடு விசாரிக்கிறார்.அவுங்க கண்களில்  துளியாய் தேங்கிய கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டே பதில் சொல்கிறார் அந்த தாய்"

Do you like this story?

8 comments

  1. //தூக்கில் போடுங்கள் உங்கள் கடவுளை//

    நான் எப்பவோ தொங்க விட்டுட்டேன் நண்பா..

    ReplyDelete
  2. ஹா ஹா நன்றி செந்தில்
    கடவுளை தூக்கில் பூடதற்கும்,கருத்து சொன்னதற்கும்.

    ReplyDelete
  3. //கடவுள்தான் எல்லாத்தையும் படைசாருன்னா "Everything is perfect"ன்னு இருக்கனும்.//

    இது மதவாதிகளின் கட்டுமானம் தான். மற்றபடி ஓர் ஊரில் ஒரு அரசன், அவன் குடிமக்களில் உடல்குறையுற்றோர் ஒருவர், அவருக்கும் தேவையானதைச் செய்யும் அரசன், அப்போது யாரைக் குறைச் சொல்ல முடியும் ?

    இனப்படுகொலைகளுக்கு எந்த ஒரு கடவுளையும் குறைச் சொல்ல முடியாது என்பதை நாம் எண்ணிப் பார்ப்பது இல்லை.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கண்டிப்பாக இன படுகொலைகளுக்கு நாம் கடவுளை குறை சொல்ல கூடாது.ஏன் வக்கிர எண்ணம் இல்லாமல்
    கடவுள் படைத்திருக்க கூடாது என்பதும் கேள்வியாய் எழுகிறது.

    நன்றி கோவி கண்ணன்.கருத்து தெரிவித்ததற்கு

    ReplyDelete
  6. கடவுளா... அப்படி யாராவது இருக்காங்களா ?

    கடவுள்
    அவன் மூட நம்பிக்கைக்கும்,
    சோம்பேறிகளுக்கும் தலைவன்..

    ReplyDelete
  7. நன்றி வெறும்பய,கருத்து சொன்னதற்கு. (மன்னிக்கவும் உங்க profile ல்ல பெயர் இல்லை)

    ReplyDelete
  8. பாவம் எது, புண்ணியம் எது?
    எது பாவம், எது புண்ணியம் என்பதையே புரிந்து கொள்ளாமல் நாட்களைக் கழிக்கின்றனர் மக்கள்.
    'ஆயிரம் தெய்வங்கள் உண்டென அலையும் அறிவிலிகாள்'
    கடவுள் மனிதனால் உருவாக்கப் பட்ட Mass Hero....

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator