இந்த வார இணைய உலகின் முக்கி யச் செய்தி - கூகுள் ப்ளஸ்.சந்தடி இல்லாமல் இதை வெளியிட்டு இருக்கிறது கூகுள்.
தனது சமூக ஊடக முயற்சிகளை விட்டுவிடுவதாக இல்லை கூகுள். ஆனால், முன்போல பஸ், வேவ், ஆர்குட்போல, தனது முயற்சிகளை மீடியாவில் பிரபலப்படுத்தி வெளியிட்டு மூக்கு வெட்டு வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை.மாறாக,தங்களது தளங்களுக்கு வருகை புரியும் பயனீட்டாளர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் புதிய featureகளை வெளியிட்டு அதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு அவற்றை தானாகப் பிரபலப்படுத்த முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. கூகுள் ப்ளஸ் என்னதான் செய்கிறது?
இன்னும் வெளிப்படையாக Launch செய்யப்படவில்லை என்றாலும், ப்ளஸ் தள உரலியை (https://plus.google.com)சொடுக்கிப்/ படித்தால்,அது என்ன செய்யப்போகும் என்பதை ஒருவாறாகப் புரிந்துகொள்ள முடிகிறது.ஃபேஸ்புக் 750 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டு வெற்றி நடை போட்ட படிதான் இருக்கிறது. இழந்த நட்புகளைக் கண்டுபிடிக்கவும், இருக்கும் நட்பு வட்டத்துடன் அளவளாவவும் ஃபேஸ்புக் அட்டகாசமான தளம் என்பதில் சந்தேகம் இல்லை.தங்களது நீண்ட கால எதிர்காலத்துக்கு ஃபேஸ்புக் தடங்கலாக இருக்கும் என்பதை கூகுள் பலமாக நம்புவது, மீண்டும் ப்ளஸ் அறிவிப்பில் தெரியவருகிறது. ப்ளஸ் தளத்தில் இருக்கும் Circles என்பது ஃபேஸ்புக்கில் இல்லாத குறிப்பிட்ட சமூக வலைப்பயன்பாடுகளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உதாரணத்துக்கு, ஃபேஸ்புக்கின் நட்பு வட்டம் 'நண்பர்கள்’(Friends), 'நண்பர்களின் நண்பர்கள்’ (Friends of Friends), 'மற்றவர்கள்’ (Everyone) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, பொதுவாக,மேற்கண்ட மூன்று குழுக்களுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பீர்கள்.இந்த அமைப்பில் தர்மசங்கடச் சிக்கல்கள் வரும் வாய்ப்புகள் உண்டு.உதாரணத்துக்கு,உங்கள் அலுவலக மேலதிகாரி உங்களது ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் இணைந்து கொள்ள நட்பு விண்ணப்பம் அனுப்புகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். நீங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.வார இறுதி ஒன்றில் கல்லூரி நண்பர்களுடன் குற்றாலம் சென்று செய்த அட்டகாசங்களை புகைப் படங்களாக எடுக்கவும் செய்கிறீர்கள். இதை கல்லூரி நண்பர்கள் பார்க்கலாம். ஆனால், மேலாளர் பார்ப்பது அத்தனை நல்ல ஐடியா இல்லை. இந்தச் சூழலில், நீங்கள் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றாமல் இருக்க வேண்டும் அல்லது மேலாளரை உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். கூகுளின் ப்ளஸ் இந்தப் பிரச்னையை இலகுவாகத் தீர்ப்பதாகத் தெரிகிறது!
Hangouts என்பதை இடம் சார்ந்த சேவை போலவும், Sparks என்பது டிவிட்டர் போலவும் தெரிகிறது. மொத்தத்தில், வெற்றிகரமான அனைத்து சமூக ஊடகத் தளங்களின் பயன்பாடுகளையும் உற்றுக் கவனித்து, அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகத் தெரிகிறது.
ப்ளஸ் பஸ் போல புஸ்ஸாகுமா?சில மாதங்கள் பொறுத்திருக்கலாமே!
......................................................
இணையம், அதுவும் சமூக ஊடகங்களில் இயங்கும்போது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏக கவனம் செலுத்த வேண்டும். இதை உணராத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி வீனர் சிக்கலில் சிக்கி அல்லுசில்லாகிவிட்டார். தனது அரசியல் நம்பிக்கைகளைச் சற்று உரத்துப் பேசுபவர் என்பதால், செனட் ஏரியாவில் ஐயா பிரபலம்.
இணையத்தில் மானாவாரியாகப் பெண்களின் தகவல்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு விரசமாக இ-மெயில்,குறுஞ்செய்தி அனுப்புவது அன்னாருக்குப் பொழுதுபோக்கு. தனது நிர்வாணப் படங்களை இணைத்து ட்வீட்டுகளைச் சரமாரியாக அனுப்ப,அதில் ஒரு பெண் அதைப் பகிரங்கமாக்க, வீனர் விவகாரம் சந்திக்கு வந்தது. அப்பழுக்கற்ற அரசியல் பொதுவாழ்க்கைகொண்ட, அவருக்கு மற்றொரு கறுத்த பக்கம் இருப்பது வெளி வந்தது எனக்கு அத்தனை ஆச்சர்யம் அளிக்கவில்லை.
'என் உதட்டைப் பாருங்கள். அந்தப் பெண் லெவின்ஸ்கியுடன் நான் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை’என்று கேமராவை உற்றுப்பார்த்து அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, சில மாதங்களில் அதை மறுத்து, 'நான் பொய் சொன்னேன்’ என்று ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை வந்த முன்னாள் அதிபர் பில் கிளின்டன், வீனரின் அதே டெமாக்ரடிக் கட்சிக்காரர் தான். கிளின்டனைப் போலவே முதலில், 'நானா... அப்டிலாம் அனுப்பலையே!’ என்று பல்லவி பாடினார். சில நாட்கள் கழித்து 'யாரோ என்னைப்போல ஆன் லைன் வேடம் போட்டுப் பண்ணிஇருப்பாங்களோ!’ என்ற ரீதியில் பேசியது காமெடி. கடைசியில், கிளின்டன் பாணியிலேயே, 'தெரியாம பண்ணிட்டேன். மன்னிச்சிருங்க!’ என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் வந்தது.கிளின்டன் எப்படியோ அதிபர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். வீனருக்கு பதவியை விட்டு விலக வேண்டிய நிலை.
பிரச்னை ஆரம்பித்ததுமே,இணைய தொழில்நுட்பம் பற்றி சரியாகத் தெரிந்த பொறியாளர் ஒருவரிடம் அறிவுரை கேட்டு இருந்தாலே, இணையத்தில் செய்திகளை அனுப்புவது கடலில் பிளாஸ்டிக் துகள்களை எறிவதுபோல; அவற்றைத் திரும்பப் பெறுவது மிகமிகக் கடினம் என்பதைச் சொல்லி இருப்பார்.பொய் சொல்லிய தர்மசங்கடத்தையாவது வீனர் தவிர்த்து இருக்கலாம். இது இணையத்தில் இயங்கும் பிரபலங்களுக்கு நல்ல ஒரு பாடம்!
நன்றி - விகடன்
தகவலுக்கு நன்றி..
ReplyDeleteதொழிநுட்ப தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே..
ReplyDelete:)
ReplyDeleteநல்லாருக்கு ஆனா இன்னும் தகவல் தேவையென்றால், உங்களிடம் மெயிலில் கேட்கலாமா..............
ReplyDelete^^^^
ReplyDeleteகண்டிப்பாக கேட்கலாம் கார்த்தி .நன்றி