இளையராஜா!!!!!!
இந்த ஒரு சொல் தமிழ்நாட்டு இசையில் ஏற்படுத்திய தாக்கத்தை எதோ இந்த கட்டுரையில் அடக்க முடியும்னா congress நிச்சயம் 2011 தேர்தல தமிழ் நாட்டுல ஆட்சிய பிடிச்சுடும் ??? ?.உன்னை பத்தி எதாச்சும் சொல்லனும்னா எங்க ஆரம்பிக்கிறது எங்க முடிக்கிறது எதுவும் தெரியாம தான் எழுத போறன். என்ன எழுதுறது உன்ன பத்தி ?? உன் இசையை நான் கேட்டு வளர்ந்தவன் இல்லை சுவாசித்து வளர்ந்தவன்,(ரொம்ப இலக்கிய நடையா போகுதோ ??? வேணாம் பாவம் படிக்கிறவங்க).
தமிழ் நாட்டு இசையில் இரு பிரிவினர்கள் இருகிறார்கள்,ஒன்று உன் ரசிகர்கள்,இரண்டு உன் ரசிகர் இல்லை என்று பொய் சொல்லுபவர்கள். உலக இசையை இப்போது தமிழ்நாட்டில் அறிமுகம் செய்கிறார்கள்,நீ தமிழ் இசையை உலகுக்கு அறிமுகம் செய்தவன்.
உன்னை பத்தி சொல்லனும்னா எந்த பாடலை சொல்லுவது,எந்த பாடலை விடுவது?இசை என்றால் என்ன என்று எனக்கு அணுஅளவும் தெரியாது,கர்நாடக கட்சேரியில் ஒரு சாரர் தலையை ஆட்டுவது தான் இசை என்று நினைத்திருந்த காலம்.நீ எனக்குள் வந்த பிறகு உன் பாடலுக்கு, அணுஅளவும் இசையை பற்றி தெரியாத நான்,என்னை போல பலர் தலையை அசைக்கிறார்கள்.
இது தான் இசை என்று, ஒரு பாமரனுக்கும் இசையை அறிமுகம் செய்தாய்.இப்பொழுது எங்களுக்கும் இசை என்றால் என்னவென்று தெரியும், அதான் உன்னை எங்களுக்கு தெரியுமே????.அன்னகிளியில் ஆரம்பித்த உன் பயணம்……….தமிழன் இருக்கும் வரை உன் பயணமும் இருக்கும்.உன்னை தவிர்த்துவிட்டு தமிழ் இசையை கேட்பது எக்காலத்திலும் முடியாது. உனது பின்னணி இசை முன்னணியில் இருந்து பல படத்திற்கு வெற்றி தேடிதந்திருக்கிறது. “ஜனனிஜனனி” பாடலை முஸ்லீம், கிறிஸ்துவர்களும்,”அல்லா உன் ஆணைப்படி” பாடலை இந்துக்களும், கிறிஸ்துவர்களும் உதடுகளில் உச்சரித்தது தேசிய ஒருமைப்பாடு.இப்படி எதை சொல்லுவது,எதை விடுவது? 1976 தொடங்கிய உன் இசை பயணத்தில் நீ பார்த்த விருதுகள் குறைவு,வேண்டாம் நீ எந்த விருதையும் பெருமை படுத்த வேண்டாம். Media exposure அதிகம் இல்லாத 1990 ஆண்டுக்கு முன்னரே நீ உன் இசை சாம்ராஜியத்தை கட்டி பால் காச்சி குடித்து விட்டாய். நீ இசை அமைப்பாளர் இல்லை நீ தான் எங்கள் இசை (correcta title எ புடிசுட்டனா).
இப்பொழுது இசை வியாபாரம் ஆகிவிட்டது ராஜா,கடைகோடியில் உள்ள சுப்பனுக்கும்,குப்பனுக்கும் இசையை கொண்டு போய் சேர்தாயே ,அதற்கு விருதுகள் குடுத்து உன்னை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.இப்பொழுது பல இசை காதுக்குள் நுழைகிறது ஆனால் உன் இசைபோல உயிருக்குள் நுழைய மறுக்கிறது,சத்தம் தான் இப்பொழுது இசையாக மாறிவிட்டது அந்த விமர்சனத்துக்கு நான் நுழைய வில்லை,உனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது ,என்னும் நிறைய நல்ல இசையை தமிழ்நாட்டு மக்கள் உன்னிடம் இருந்து எதிர்பார்கிறார்கள்
(இந்த கட்டுரை முழுவதும் உன்னை வா,போனு எழுதிருக்கன் அப்பதான் நல்லா இருக்கு இல்லன்னா இப்போது இருக்கும் பாடல்கள் போல எனக்கு நீ அன்னியப்பட்டு நிற்கிறாய்)
சிறப்பு. எனக்கும் ஆதர்சணம் தான். ஆனால் காலத்தின் கரங்களில் அவர் சரியான விதமாய் அமர்ந்தாரா? உணர்ந்தாரா? புரிந்து கொள்ளவாவது முயற்சித்தாரா? இன்னமும் இது போன்ற பல கேள்விகள் என்னை கேலி செய்து கொண்டுருக்கிறது?
ReplyDeleteமிகவும் நன்றி தேவியர் இல்லம்(ஜோதிஜி ) உங்களைபோல் சீனியர் படைப்பாளிகள்,என் வலை தளத்தை பார்த்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி.கமல் மற்றும் ராஜாவின் தீவிர ரசிகன்.ராஜாவின் பாட்டை கேட்டால் நமக்கும் கொஞ்சம் இசை ஞானம் வரும் என்பது என் கருத்து,உங்களைபோல் பல வலைபூக்களை பார்த்த விளைவு தான் "கிட்டிபுல்லு".உங்கள் ஆதரவு எனக்கு எப்பொழுதும் வேண்டும்.கையை துடைக்க வேண்டாம்,எச்சி பலமான உறவுமுறைக்கு ஒரு பாலம்.
ReplyDeleteHe is the grate man. Thanks to the god
ReplyDelete