3

ரயிலின் பாதையில் பூக்கின்ற பூ நான் -அழகான மெலடி


அப்பாவின்னு ஒரு படம் வர போகுதுங்க......படத்தோட பாட்டு வந்துருக்கு ,இசை ஜோஷ்வா ஸ்ரீதர்...அதுக்கு என்னனு கேக்குறிங்களா.... அந்த படத்துல வர "ரயிலின் பாதையில் பூக்கின்ற பூ நான்ன்னு ஒரு பாட்டு தான் இந்த பதிவு எழுத காரணமா இருந்துச்சு, இதுக்கு ஒரு பதிவானு நினைக்காதிங்க இந்த பாட்ட"ஹரிஹரன் ஸ்ரேயா கோஷல் பாடிருகாங்க...... என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார் ரகம் இந்த பாட்டு ,ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கும் அழகான மெலடி.பொதுவா டூயட் பாட்டுனா ஆண் குரல் தான் முதல்ல ஆரம்பிக்கும் ஆனா இங்க வெயில் காலத்து சில் சர்பத் மாதிரி semi classicala ஆரம்பிக்குது ஸ்ரேயா கோஷல் குரல், ஆனா பாட்டு ஜெட் ஸ்டார்ட் ஆகுறது ஹரிஹரன் பாட ஆரம்பிக்கும் போதுதான், உண்மையான காதலர்கள் பாடுற மாதிரியே இருக்குங்க.ஹரிஹரன் கேக்கணுமா அந்தர் பண்ணிருகாரு.semi classical ல ஆரம்பிச்சு full classical லா அழகா மாறுது பாட்டு, வார்த்தைகள் ரொம்ப அழகா இருக்கு எழுதுனது முத்துக்குமாரா, வைரமுத்துவா?. ஜோஷ்வா ஸ்ரீதர் கல்லூரி படத்துலேயே கவனிக்க பற்றுகணும்,கண்டிபா நல்லா இசை அமைப்பாளர் மத்தியில் அவருக்கு ஒரு இடம் உண்டு.இந்த படம் புது முகங்கள் நடிக்கிற படம் reach ஆகுறது கஷ்டம், பெரிய நடிகர் படத்துல இந்த பாட்டு இருந்துச்சுன்னா இந்த பாட்டுக்குனு ஒரு தனி ரசிகர் பட்டாளம் ஒருவாகிருக்கும்,கண்டிப்பா பாட்ட கேட்டு முடிச்சதும் ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல பாட்டு கேட்ட திருப்தி கிடைக்கும்....THANKS ஜோஷ்வா

|

பிடித்த வரிகள் :
ரயிலின் பாதையில் பூக்கின்ற பூ நான்,புயலின் நடுவிலும் பறக்கின்ற கிளி நான்.
யாரும் பாக்காமலே எல்லோரையும் பாக்கும்.
மாய உலகமிது என்னென்னவோ நடக்கும்.

Do you like this story?

3 comments

  1. பாடல் நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  2. அதான் செல்வா இந்த பாட்டை யாரும் கேட்காம விற்ற கூடாதுன்னு தான் பதிவு பண்ணினேன்.வந்து கருத்து சொன்னதற்கு நன்றி செல்வா

    ReplyDelete
  3. நன்றாக இருக்கின்றது

    ReplyDelete

Feeds

Blogger Widgets