நாம அனுப்புற ஈமெயில் சில நண்பர்களுக்கு மட்டும் ,தெரிந்தவர்களுக்கு மட்டும் ,சொந்தகளுக்கு மட்டும் என்று பிரித்து அனுப்ப சில சமயத்தில் தேவை இருக்கலாம். எடுத்துகாட்டாக சில ஈமெயில்கள் உங்கள் நண்பர்களுக்கு அதுவும் ஸ்கூல் நண்பர்களுக்கு மட்டும் அனுப்ப வேண்டும் என்றால் நாம் நம் ஈமெயில் Contactsயில் ஒருவர் ஒருவராக தேடி பிடித்து அனுப்புவோம். அதனால் சில சமயத்தில் சில பெயர்களை விடு பட்டு போய்விடவும் வாய்புகள் அதிகம்.அதற்கு பதிலாக ஜிமெயிலில் நம்முடைய நண்பர்களை,தெரிந்தவர்களை,சொந்தங்களை ஒரு ஒரு Group ஆக பிரித்து வைத்து ,ஈமெயில் அனுப்பும் போது எளிதாக எல்லோருக்கும் ஈமெயில் அனுப்பலாம்.எப்படி என்று கீழே பாருங்கள்.நாம அதிகம் பயன்படுத்துற ஜிமெயிலில் எப்படி என்று பார்போம்.
ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து Contacts கிளிக் செய்து கொள்ளுங்கள்
New Group கிளிக் செய்து கொள்ளுங்கள்.
"New Group" கிளிக் செய்தவுடன் இது போல் விண்டோ ஓபன் ஆகும்,அதில் உங்களுக்கு தேவையான Group பெயரை தந்து விடுங்கள்.
பிறகு Other contacts கிளிக் செய்யவும்.
அந்த Group யில் உங்களுக்கு தேவையான Contactsயை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதற்கு மேல் இருக்கும் Group கிளிக் செய்து,அதில் வரும் உங்கள் Group பெயரை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.உங்கள் Contacts Group யில் சேர்ந்து விடும்.
வேலை முடிந்தது .நீங்கள் இப்பொழுது ஈமெயில் அனுப்பும் போது " TO " இடத்தில் உங்கள் Group பெயரை Typeசெய்தால் (அதற்குள் உங்கள் Groupபெயர் கீழே வந்து விடும்)அந்த குறிப்பிட்ட பெயர்களுக்கு ஈமெயில் சென்று விடும்.
எளிதாக எந்த பெயரும் விடு படாமல் அனைவருக்கும் தேவையான ஈமெயில் அனுப்பலாம்.
nalla thakaval...
ReplyDeleteThanks for the info
ReplyDeleteUseful info, thanks.
ReplyDeleteஎன் தளத்திருக்கு முதல் ஆளாக வந்து கருத்து சொல்லும் வெறும்பய, என் நன்றிகள்.உங்கள் பெயரை கொஞ்சம் சொல்லுங்கள்.
ReplyDeleteஜெயதேவா,கிரிக்கு நன்றிகள்.
ReplyDeleteநல்ல தகவல்.
ReplyDelete