பெயர் : தமிழக வாக்காளர்கள்
வயது : ஓட்டு போடும் வயது
இடம் : இப்பொழுது போயஸ் தோட்டம்,அப்பொழுது கோபாலபுரம்.
நிரந்திர இடம் : ஒன்றுமில்லை.
பலம் : எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பது.
பலவீனம் : மாற்று அணியை பற்றி சிந்திக்காதது.
சலிப்பு : தேர்தல் அறிக்கைகள்.
சாதனை : 78 சதவித வாக்குபதிவு.
சோதனை : ஒரு மாத காத்திருப்பு.
நீண்ட கால சாதனை : தெளிவான சிந்தனை மூலம் ஆட்சியாளர்களுக்கு கிலியை எற்படுத்குவது.
கலக்கல் மூவ் : முக்கால் வாசி அமைச்சர்களுக்கு "டாட்டா " காட்டியது, சாதி கட்சிகளுக்கு ஆப்பு அடித்தது
சூப்பர் மூவ் : வடிவேலுக்கு கூட்டம் கூடி ஆட்சியாளர்களை குழப்பியது.
ஹீரோ : பிரவீன் குமார்.
ஹீரோயின் : ஜெயலலிதா.
காமெடியன் : சினிமாவிலும் நிஜத்திலும் "வடிவேலு"
பிடித்த பாடல் : " அம்மா என்றழைக்காத உயிரில்லையே"
பிடிக்காத பாடல் : "நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்"
Entertainers :வடிவேலு,கேப்டன்,குஷ்பூ,பாக்யராஜ்,குமரிமுத்து,லியோனி,சிங்கமுத்து.
ஒரே எரிச்சல் : மின்வெட்டு
நீண்டகால எரிச்சல் : விலைவாசி.
பயம் : Tesma,Esma,கண்ணகி சிலை,சீரணி அரங்கம்.
எதிர்காலம் : நன்றாக இருக்கும் என்று எப்பொழுதும் நம்பி கொண்டிருப்பது
பரிதாபபட வேண்டியவர்கள் : வைகோ,அழகிரி,வடிவேலு,கனிமொழி மற்றும் ராசா
கலைஞரிடம் சொல்லுவது : நாங்க கேன இல்ல
ஜெயலலிதாவிடம் சொல்லுவது : எங்கள கேனன்னு நினைச்சுராதிங்க அம்மணி.
கேப்டனுக்கு சொல்லுவது : வயலுக்கு பாஞ்ச தண்ணி கொஞ்சம் புல்லுக்கும் பாஞ்சிருக்கு.
வடிவேலுக்கு சொல்லுவது : "நீ அந்த விஷயத்துக்கு சரிபட்டு வர மாட்டணு சொன்னோம்ல"
கலைஞருக்கு ஒரு Advice : அய்யா கலைஞரே !!!!2009 முள்ளிவாய்கால் போரின் போது இந்த காங்கிரஸ் கட்சியின் மனம் நோக கூடாதுன்னு
நீங்க எவளவோ பூசி மெழுகி பேட்டி தந்திங்க." மழை விட்ருச்சு தூவானம் விடல ,prabhakaran is my friend but im not a Terrorist ன்னு சொன்னிங்க நியாபகம் இருக்கா அய்யா ?(Terroristன்னா அர்த்தம் தெரியுமா கலைஞரே )....போயும் போயும் இந்த பச்சோந்தி காங்கிரசுக்காகவும் உங்களோட சுய லாபத்துக்காக ஈழ மக்களுக்காக ஒரு துறும்ப கூட கிள்ளி போடலையே.நீங்க மட்டும் நினைச்சிருந்தா காங்கிரசுக்கு நெருக்கடி தந்து ஆட்சிய துறந்து தமிழ் நாட்டு மக்களின் சூப்பர் ஆதரவோடு தனி Majorityல திரும்பவும் ஆட்சியை பிடிச்சுருக்கலாம். நீங்க செய்தீர்களா????? சோனியா ஜெயலலிதாவ தேநீர் Partyக்கு அழைத்து காங்கிரஸ் பச்சோந்திதனத்த காட்டிருச்சு...ஆனா ஜெயலலிதா காங்கிரசுக்கு காட்ட போகும் தண்ணிய மட்டும் பாருங்க.
\\அழகிரி,கனிமொழி மற்றும் ராசா \\ நல்லவங்க சாஞ்சா பரிதாபப் படலாம், ஆனா, குண்டாம் போக்கிரிகள், கொள்ளையர்கள், ஊதாரிகள், நாதாரிகள் சாயும் பொது சந்தோஷப் படனும்.
ReplyDeleteவயலுக்கு பாஞ்ச தண்ணி கொஞ்சம் புல்லுக்கும் பாஞ்சிருக்கு..........இதை ஏத்துக்கமுடியாது.
ReplyDeleteவசவுகள்மத்தியில் எதிர்நீச்சலில் வெற்றி பெற்றவர் கேப்டன்.