ரஜினி ரசிகர் தற்கொலை இரண்டு நாள் முன்பு வெளிவந்த தகவல்.என்னை மிக பாதித்த செய்தி இது.இதற்கு முன்னால் அரசியல் தலைவர் இறக்கும்போதெல்லாம் சிலர் தீக்குளிபார்கள்,சமந்தப்பட்ட தலைவர் இரங்கல் அறிக்கை வெளியிடுவார்,பிறகு எனக்காக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று ஒரு அரசியல் அறிக்கை வெளியிடுவார், அதிகம் இறந்தவரின் குடும்பத்துக்கு 50000 நிவாரண தொகை தந்து ஒரு போட்டோ எடுத்து தினத்தந்தியில் வெளியிடுவார்.அதன் பிறகு அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்,அவருக்காக இறந்தவரின் குடும்பம் எப்படி இருக்கும் என்று 12b படம் பார்த்தால்,அன்றே அல்லது இரண்டு நாளில் தீக்குளித்தவரை அந்த அரசியல்
தலைவர் மறந்துபோவது தான் கொடுமையான உண்மை.இறந்தவருக்கு அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி என்றும் சில கடமைகள் இருக்கும்,இவர்கள் அனைவரையும் மறந்துவிட்டு அந்த "SO CALLED அரசியல்வாதிகாக"தன் உயிரை விடும் ஒரு கேவலமான போக்கு தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கிறது.அதுவும் தன் தலைவனுக்கு உடம்பு சரி இல்லை என்றவுடனே நாம் இந்த பூமியில் இருக்க தகுதி அற்றவன் போல் நினைத்து தன் உயிரையே விடும் அளவுக்கு ஒரு ரசிகன் இருக்கிறான் என்று உங்கள் தலைவனுக்கு தெரியுமா??? உங்கள் முகம், நீங்கள் யார், இப்படி பெயர் உள்ளவர் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட உங்க தலைவனுக்கு தெரியாமல் இருக்கும்போதுதான்,நீங்க செத்து உங்க தலைவனுக்கு உங்கள அறிமுகபடுத்துறீங்க.... எவ்வளவு கேவலமான விஷயம்.அதோட சமந்தப்பட்ட தலைவர்,நடிகருக்காக ஒருத்தர் தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு செய்தி வரும்போது அவர்களோட மற்ற ரசிகர்களுக்கு ஒரு பெருமை. இது அதோட கேவலமான விஷயம்..நீங்க செத்து போற அளவுக்கு உங்க தலைவர்கள் தகுதியானவர்களா???? தமிழ்நாட்டு மக்கள "Sentimental Idiots"ன்னு சொன்ன மட்டும் நமக்கு கோபம் அவ்ளோ வருது .
தலைவர் மறந்துபோவது தான் கொடுமையான உண்மை.இறந்தவருக்கு அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி என்றும் சில கடமைகள் இருக்கும்,இவர்கள் அனைவரையும் மறந்துவிட்டு அந்த "SO CALLED அரசியல்வாதிகாக"தன் உயிரை விடும் ஒரு கேவலமான போக்கு தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கிறது.அதுவும் தன் தலைவனுக்கு உடம்பு சரி இல்லை என்றவுடனே நாம் இந்த பூமியில் இருக்க தகுதி அற்றவன் போல் நினைத்து தன் உயிரையே விடும் அளவுக்கு ஒரு ரசிகன் இருக்கிறான் என்று உங்கள் தலைவனுக்கு தெரியுமா??? உங்கள் முகம், நீங்கள் யார், இப்படி பெயர் உள்ளவர் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட உங்க தலைவனுக்கு தெரியாமல் இருக்கும்போதுதான்,நீங்க செத்து உங்க தலைவனுக்கு உங்கள அறிமுகபடுத்துறீங்க.... எவ்வளவு கேவலமான விஷயம்.அதோட சமந்தப்பட்ட தலைவர்,நடிகருக்காக ஒருத்தர் தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு செய்தி வரும்போது அவர்களோட மற்ற ரசிகர்களுக்கு ஒரு பெருமை. இது அதோட கேவலமான விஷயம்..நீங்க செத்து போற அளவுக்கு உங்க தலைவர்கள் தகுதியானவர்களா???? தமிழ்நாட்டு மக்கள "Sentimental Idiots"ன்னு சொன்ன மட்டும் நமக்கு கோபம் அவ்ளோ வருது .
Facebook,Twitter,orkutல பெரிய விவாதம் நடக்குது,போட்டோ Update பண்றாங்க,நாட்டுல ஒரு வேல அரிசிசாதம் கிடைக்காம அவ்ளோ குடும்பங்கள் இருக்கு,பத்து வயசுல உள்ள குழந்தைகள் படிப்ப தொடர முடியாம தீப்பெட்டி தொழில்சாலைக்கு வேலைக்கு போறாங்க, இதுக்கெல்லாம் உங்க SocialNetworkingsitiesச பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே ???இன்னைக்கு காலைல ரஜினிகாந்த் சிரிச்சுகிட்டே தன் மகளோட புகைப்படதுல இருக்கார்,அத வெளியிட்டவர் அவரோட மாப்பிள்ளை. உங்களுக்காக ஒரு உயிர் போயிருக்கு அவர புதைச்சு மூணு நாள் ஆகுது,அவரு வீட்ல நடமாடிட்டு இருந்த ஒரு ஜீவன் இப்ப போட்டோல மட்டும் தான் இருக்கு.ஆறுதல் சொல்ல போவிங்களா சூப்பர் ஸ்டார்???உங்க மனைவி மக ளை அனுப்பியாவது ஆறுதல் சொல்ல சொல்லுங்க..இந்த மாதிரி விஷயம் தமிழ்நாட்டுல மட்டும் தான் நடக்கும். இரண்டு படம் ஹிட் ஆனா போதும் அடுத்த தீபாவளி, பொங்கலுக்கு தொலைகாட்சில அவுங்க கொடுக்குற Adviceச வாய புலந்துகிட்டு கேக்குறவரைக்கும் தமிழனின் தலையெழுத்து இதான் .......வேற என்னத்த செய்ய.
//தமிழ்கூட கைகோர்த்து பயணிக்கும் சாதாரணமான தமிழன்.தமிழில் எதை கிறுக்கினாலும் தமிழ் அதை அழகாக காட்டிவிடும் என்ற நம்பிக்கையில்// rasithen.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteசெய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள்.
ReplyDeleteரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்?
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா?
அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன் இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்?
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களைப்போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள், முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன்... பேசினேன்... இப்படி அறிக்கைகள் பறக்கின்றன. மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள்.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போய் பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு(!) கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலைப்படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வெற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை எப்போது மாறும்? நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
"எந்திர" தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
அழுத்தமான பதிவு ஜான். உங்க நடை நன்றாக இருக்கிறது.நல்ல ஆழமான அலசல் ஜான்.வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
ReplyDeleteWELL said Mr. JOHN. Appreciated!
ReplyDeleteஇந்த (பாழாய் போற) ஊடகங்களும், தம் பங்குக்கு, செய்தியை மிகைப்படுத்தி, சுயவிளம்பரத்தை தேடிக்கொள்வதை என்னவென்று சொல்வது?!
என்னக் கொடுமை சார் இது ! சும்மாங்காட்டி இளசுகள் மீது நைசா குற்றம் சொல்லி'ட்டு.. பெருசுங்க செய்யுற அழப்பறை தாங்க முடியல டோய் !
ReplyDeleteஅருமையான பதிவு. தமிழ்நாட்டில் இன்னும் சில முட்டாள் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் வேதனை.
ReplyDeleteஅழுத்தமான பதிவு !!
ReplyDeleteதமிழ் முட்டாள் ரசிகர் மேலும் சில பேர் இருக்கிரார்கள்.
ReplyDeleteஇளைய தளபதி இன் திருப்பாச்சி படத்திற்கு முதல் காட்சி 'Ticket ' கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டவரும் நம் தமிழ்நாட்டிலே!