3

ரக்க்ஷா பந்தனின் (ராக்கி)கதை

இன்று ரக்க்ஷா பந்தன் .பசங்களுக்கு  இன்னைக்கு செமஸ்டர் எக்ஸாம் இருந்தாலும் லீவு போடுற நாள்.வட நாட்டு பண்டிகையான ரக்க்ஷா பந்தன்  இப்பொழுது தமிழகத்திலும் பிரபலமடைந்து விட்டது.மெலிதாக இந்த பண்டிகையில் ஒளிந்திருக்கும் ஒரு "குறும்புத்தனமும்" இந்த பண்டிகை
பிரபலமானதுக்கு காரணம் என்று சொல்லலாம்.எதன் அடிப்படையில் இந்த பண்டிகை கொண்டாடபடுகிறது என்று  சுவையான உண்மை தகவல் இருக்கிறது.

வடநாட்டில் குறிப்பாக ராஜஸ்தானில் முன்பு மஹாராண பிரதாப் சிங்கின் முன்னோர்கள்(இப்பொழுது ராஜ்புட் என்று அழைக்கபடுகிறார்கள்),வாழ்ந்து வந்தார்கள்.அந்த பரம்பரையில் வந்த ராவல் ரட்டல்  சிங்கின்  மனைவி  ராணி பத்மினி.அவள் ஒரு  பேரழகி.பார்பதற்கு பளிங்குசிலை போல் இருக்கும் அவளின் மேல்  சுல்தான் முஹம்மது கில்ஜியின் கண்படுகிறது.அவளை அடைய ஆசைப்பட்டு ராவல் ரட்டல் சிங்கை நயவஞ்சகமாக அணுகி ராணி பத்மினியை பார்க்க நினைக்கிறான் கில்ஜி.ராணா பிரதாப் சிங்  குடும்பம் பாரம்பரியத்தை பெரிதும் மதிப்பவர்கள் தனது மனைவியின் முகத்தை ஒரு தண்ணீரின் பிரதிபலிப்பில் பார்க்க சொல்கிறார் ராவல் ரட்டல் சிங்.ராணி பத்மினியின் பேரழகில் மயங்கிய கில்ஜி  பின்பு ராவல் ரட்டல் சிங் மீது படையெடுத்து  கொன்று விடுகிறான்.இதன் மூலம் பத்மினியை அடைய அவனது திட்டம்.

இதனை புரிந்து கொண்ட பத்மினி ஹுமாயுனின் உதவியை நாடி  ஒரு சகோதரராக எனக்கு உதவுமாறு கேட்கிறார்.அதற்கு அவர் அனுப்பியதுதான் இந்த ராக்கி கயிறு.இதில் சோகம் என்னவென்றால் ஹுமாயுன் உதவ முன்வருவதற்கு முன் கில்ஜி வந்துவிடுகிறான்.அவனை பார்த்ததும் ஜோகர் என்ற முறைப்படி தீக்குள் விழுந்து தன்னை மாய்த்து கொள்கிறார் பத்மினி.

ராணி பத்மினி ஹுமாயுனை  சகோதரராக நினைத்து அனுப்பிய அந்த கயிறு தான் பின்னால் ரக்ஷா பந்தனாக மாறி கொண்டாடபடுகிறது.   
Do you like this story?

3 comments

 1. kilgi's period is much earlier than humayun.

  ReplyDelete
  Replies
  1. source:http://forum.indianetzone.com/5/raksha_bandhan_indian_festival.htm

   Delete
 2. நல்ல தகவல்


  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

  ReplyDelete

Feeds

Blogger Widgets