0

அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற - கடல்



இளையராஜாவை நிறைய பிடிக்கும் என்றாலும் இங்கொன்று அங்கொன்றாய் பல ரகுமான் பாடல்களுக்கும் நான் ரசிகன்.இதற்கு முன் விண்ணை தாண்டி வருவாயாவில் "அன்பில் அவன்" பாடல் எனக்கு பிடித்திருந்தது.அதேபோல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமிபத்தில் வெளியான கடல் படத்தின்
பாடல்கள் ரகுமான் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இசை ரசிகர்களுக்கும் ஒரு பெரிய ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற பாடல்தான் என் பிக்.



என்பதுகளில்  புகழ்பெற்ற ரே சார்லஸ் வகை பாடல்களை நேர்த்தியாக தமிழ்படுத்தி, தமிழ் மக்களுக்கு "அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற" பாடல் மூலம் அறிமுகம் செய்திருக்கிறார் ரகுமான்.Blues, Rock, Soul, Gospel போன்ற பாடல் பாணிகளுக்கு தன குரல் மூலம் உயிர் தந்தவர் அமெரிக்காவை சேர்ந்த ரே சார்லஸ்.குரலுக்கு முக்கியவத்துவம் தந்து, இசையை தன் குரலுடன் மெல்லிய நீரோடை போல்  அழகாக தன் பாடல்களில்    பயணிக்க செய்வார்.இந்த பாணியை கோஸ்பல் வகை அல்லது ரே சார்லஸ் வகை என்று சொல்லுவார்கள்.ரகுமான் கையாண்ட இந்த மெட்டு தமிழுக்கு ரொம்ப புதுசு.சிட் ஸ்ரீராம்தான் பாடலை பாடியிருக்கிறார்.பாடல் கேட்பதற்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.பாடலின் நடுவே நாலு அஞ்சு இடத்தில மட்டும் ட்ரம்ஸ் ஒலிப்பது கேட்கிறது மற்றபடி முழுதும் ஸ்ரீராமின் குரல் ஆதிக்கம்தான்.


நீங்கள் இந்த பாடலை கேட்க துவங்கியதும் பழைய ஆங்கில பாடல் எதோ ஒன்றை கேட்ட மாதிரி  இருக்கே என்று நினைக்கலாம்.நீங்கள் இந்த பாணி இசையை முன்பு கேட்டிருந்தாலும், இந்த மாதிரி இசையை  இவ்வளவு நேர்த்தியாக தமிழ்படுத்த ரகுமானுக்கு மட்டுமே சாத்தியம்.  ஸ்ரீராமின் அந்த ஏக்கம் கலந்த குரலில் நாம் கிறங்கிதான் போகிறோம்.



இதுபோல் நிறைய ரகுமான் மேஜிக் பாடல்களை, தமிழ் இசை ரசிகனாய் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.



பாடல் : அடியே அடியே

பாடகர் : சிட் ஸ்ரீராம்
கவிஞர் : கார்கி
ட்ரம்ஸ் : ரஞ்சித் பரோட்@நிர்வானா ஸ்டுடியோஸ்,மும்பை
ஜாஸ் வோகல் : மரியா ரோ வின்சென்ட்

பிடித்த வரிகள் :பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாறனே
இந்த காடு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்னே சுத்துரேனே....


Do you like this story?

No comments

Leave a Reply

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator