எனக்கு மொத்த ரவுடிகள் லிஸ்டும் வேணும்...விஜய் திருபாச்சியில் பேசும் வசனம்.
இதேபோல் சந்தையில் இருக்கும் அனைத்து குளிகை கணினிகளை ஒரே அடியாக அடித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆப்பிள் நிறுவனம்
ஐபேட் மினி என்ற கை குளிகை கணினியை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சாம்சுங் நிறுவனத்தின் சந்தையை குறி வைத்தே ஆப்பிள் ஐபேட் மினியை அறிமுகபடுத்துகிறது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று ஐபேட் மினி முழுவதுமாக சந்தைக்கு வந்த பிறகு தான் சொல்லமுடியும்,ஆனால் முதல் கட்ட தகவல் அனலிசிஸ், ஆப்பிலின் ஐபேட் மினி தனது எண்ணத்தில் 80 சதவீதம் வாடிக்கையாளரை திருப்திபடுத்திவிடும் என்கிறது.
ஆப்பிள் ஐ பேட் மினி - ஐ பேட் 2
ஆப்பிள் கணினிகள் மற்றும் அமேசான் விலை நிலவரம் தோராயமாக
(இந்திய ரூபாகளில் )
ஐ பேட் மினி விலை : 20000(16 GB)
ஐ போட் டச் : 18000 (32GB)
ஐ பேட் 2 அறிமுக விலை : 25000
ஐ பேட் Fourth generation : 28000
அமேசான் கிண்டில் : 11000
ஐ பேட் மினி, அமேசான் கின்டிலை விட 120 டாலர்கள் மட்டுமே அதிகம் என்பதால் பல பயனர்கள் ஐபேட் மினிக்கு மாறுவார்கள் என்பதும் ஆப்பிள் போட்டு வைத்திருக்கும் கணக்கு.ஆக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆரோகியமான போட்டி நிலவும் பட்சத்தில் பயனர்களுக்கு சந்தோஷம்தான்.
இன்னும் சிறிது நாட்களில் விலை குறையும் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி...
yes boss...
Delete