4

ஸ்பெயின் v/s நெதர்லாந்து ஒரு முன்னோட்டம்


உலககோப்பை கால்பந்து கிளைமாக்ஸ்யை நெருங்கிவிட்டது. JULY12 யார் கோப்பையுடன் தாயகம் திரும்ப போகிறார்கள் என்று தெரிந்து விடும்.கோப்பை கனவுடன் வந்த இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து,போர்சுகல் அணிகள் முதல் சுற்று,கால் இறுதி,அரை இறுதி என்று வெளியேறி இப்பொழுது யாரும் எதிர்பார்க்காத ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதி யுத்தத்தில்.அந்த இரு அணிகளை பற்றி ஒரு முன்னோட்டம் பார்க்கலாம்.

ஸ்பெயின் FIFA Ranking : 2 (1565 points).
கேப்டன் : Iker Casillas
கோச் : Vicente del Bosque

இந்த அணி முதல் முறையாக உலக கோப்பை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று  இருக்கிறது.அழகாக  பந்தை  PASS செய்வதில் தொடங்கி அதை கோலாக மாற்றவது வரை ஸ்பெயின் வீரர்கள் கில்லாடிகள்.இதற்கு துணை இருப்பவர்கள் VEILA,PUYOL, FERNADO TORRES, PEDRO RODRIGUEZ போன்றவர்கள்.ATTACK முறையில் விளையாடும் இவர்கள் DEFENCE சிலும் கலக்குவார்கள்.Football ஹீரோஸ் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்திடம் நான்கு கோல் போட்ட ஜெர்மனி,ஒரு கோல் கூட ஸ்பெயினிடம் போடாமல் இருந்தற்கு இவர்களின் அதிரடி  Defence தான் காரணம்.அதே போல் சின்ன இடைவெளியில் உள்ளே புகுந்து தண்ணி காட்டுவதில் கைதேர்தவர்கள்.ஜெர்மனிக்கு எதிராக  PUYOL கோல் அடிப்பதை பாருங்கள்,எங்கிருந்து வருகிறார் என்றே தெரியாது.இவர்கள் பலம் வாய்ந்த அணி என்று எல்லோருக்கும் தெரியும் என்றாலும் 2008 European Championship யை தட்டி செல்லும் போது தான்  இவர்கள் POFRESSIONALS என்று உலகுக்கு தெரிந்தது .இவர்களிடமும் குறை இல்லாமல் இல்லை.குழு உணர்வு இல்லாமல் விளையாடுகிறார்கள் என்று குற்றச்சாட்டும் உண்டு.இதுவரை நடந்த போட்டிகளில் ஒரு கோல் அடித்துதான் பெரும்பாலும் ஜெய்ச்சாங்க defence நன்றாக இருப்பதால் தப்பிச்சு வந்த்ருகாங்கன்னு சொல்றவங்களும் இருக்காங்க.


நெதர்லாந்து வீரர்களுக்கு சவால் விடும்  ஸ்பெயின் வீரர்கள் :

FORWARD :
DAVID VILLA,
FERNADO TORRES

MIDFIELDERS :

XABI ALONSO
DAVID SILVA
CESC FABREGAS

DEFENDERS :
CARLES PUYOL
SERGIO RAMOS


நெதர்லாந்து வீரர்கள் நோட் செய்ய வேண்டியது

Nov 2006 முதல் Nov 2009 தொடர்ச்சியாக 35 ஆட்டங்களில் தோல்வியை தொட்டதில்லை ஸ்பெயின் . ஜெர்மனிய களத்துல திண்டாட விட்டத நீங்க மறந்துருக்க மாட்டிங்க.


  
  
  
(David veilla)


(puyol)



  


நெதர்லாந்து FIFA Ranking : 4 (1231 points).

கேப்டன் : Giovanni Christian van Bronckhorst
கோச் : Lambertus "Bert" van Marwijk

இந்த உலக கோப்பையில் தோல்வி அடையாத குழு.பிரேசில்,டென்மார்க், போன்ற அணிகளை வெல்லுவது என்பது சாதாரண விஷயம் இல்லை.இந்த அணிக்கு பலமாக கருதபடும் விஷயம் குழு ஒற்றுமை.எந்த நேரத்திலும் கோல்   அடிக்க  கூடியவர்கள்.Defence அவளவாக இல்லை என்றாலும் attack முறையிலும், களத்தில் சுறுசுறுப்பாக விளையாடுபவர்கள் என்பதும் இவர்களின் கூடுதல் பலம்.  RYAN BABEL, KUYT  போன்றவர்கள்  LIVERPOOL FOOTBALL CLUB காக விளையாடும் வீரர்கள்.அனால் இவர்களை தவிர்த்து பெரிதாக எதிர்பாக்கப்படும் வீரர் Wesley sneijder. இப்பொழுது Intermilan காக விளையாடும் இவர் 2008 European tournament யில் "GOAL OF THE TOURNAMENT" அவார்டை வென்றவர்.இந்த உலக கோப்பையில் பிரேசில்,உருகுவேயுடன் மோதிய ஆட்டங்களில் "MAN OF THE MATCH" வென்றுள்ளார்.இவர்களிடம் பெரிதாக ஸ்டார் வீரர்கள் இல்லை என்பது கொஞ்சம் பலவீனமாக தெரிந்தாலும்,இவர்களின் குழு ஒற்றுமை அதனை சரி செய்து விடும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


ஸ்பெயின் வீரர்களுக்கு சவால் விடும் நெதர்லாந்து வீரர்கள் :



FORWARD :
RYAN BABEL
DIRK KUYT
ROBIN VAN VERSIE

MIDFIELDERS :
WESLEY SNEIJDER
RAFAL VAN DER VAART

DEFENDERS :
EDSON BRAAFHEID
JOHN HEITINGA

ஸ்பெயின் வீரர்கள் நோட் செய்ய வேண்டியது

இந்த உலக கோப்பையில் தோல்வி அடையாத குழு .....செம FORM பா



                                                                     


(wesley sneijder)


(kuyt)


   
இரு அணிகளுக்கும் 50:50 அளவில் வாய்ப்பு இருப்பது தான் இப்போதய நிலைமை.பலம் வாய்ந்த இரு அணிகளை(பிரேசில்,ஜெர்மனி) இந்த அணிகள்
ஜெய்திருப்பதால் இறுதி ஆட்டத்தில் சூடு பறக்கும் என்பது உண்மை.

நீங்க யாரு ஜெய்ப்பான்னு சொல்றிங்க........

Do you like this story?

4 comments

  1. spain machi spain....always my vote to that

    ReplyDelete
  2. எனக்கும் ஸ்பெயின் தான் ஜெய்க்கும்ன்னு தோணுது,ஆனா நெதர்லாந்து செம form ல இருகாங்க அறிவு.

    ReplyDelete
  3. Anonymous15 July, 2010

    Ha ha spain

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator