ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கூகிலில் ஒரு சூப்பர் வசதியில் நாம் பயன்படுத்தும் மெயின் ஜிமெயில் கணக்கிலிருந்து,மற்ற ஜிமெயில் கணக்கு மூலம் எப்படி ஈமெயில் அனுப்பலாம் என்று பார்த்தோம். அதேபோல் மற்ற அதிகம் பயன்படுத்தாத ஜிமெயில் கணக்குக்கு வரும் ஈமெயிலை எப்படி மெயின் கணக்கிற்கு லிங்க் செய்து படிப்பது என்று இந்த பதிவில் பார்போம்.
உங்கள் மெயின் ஜிமெயில் கணக்கில் நுழைந்து-Settings-Accounts and Import
கிளிக் செய்யவும்.Check mail using POP3 கிளிக் செய்யவும்
நீங்கள் எந்த கணக்கிலிருந்து ஈமெயிலை படிக்க வேண்டுமோ அந்த கணக்கின் பெயரை கொடுங்கள்.
மேலே படத்தில் உள்ளது போல் உங்கள் Password தந்து மற்ற செய்திகளை தந்து Add account கிளிக் செய்யவும்.
இங்கு NO கிளிக் செய்து Finish கிளிக் செய்யவும்.இங்கு வேலை முடிந்தது.
பிறகு மேலே Forwarding and Pop/IMAP கிளிக் செய்யுங்கள்.
அங்கு Enable pop for all mail மேலே படத்தில் உள்ளது போல் செலக்ட் செய்து,மறக்காமல் கீழே சென்று Save Changes கிளிக் செய்து விடுங்கள்.
வேலை முடிந்தது.இப்பொழுது உங்களது மெயின் கணக்கிலிருந்து மற்ற ஜிமெயில் கணக்குக்கு வரும் ஈமெயில்களை படிக்க முடியும்.அதிகம் பயன்படுத்தாத ஜிமெயில் கணக்கின் முகவரியை லிங்க் செய்து கொள்ளுங்கள்,அந்த கணக்குக்கு நுழையாமல் உங்களது மெயின் ஜிமெயில் கணக்கில் இருந்து எல்லா ஈமெயில்களையும் படிக்க இது ஒரு சூப்பர் வசதி.
great job...and nice blogging.
ReplyDeletehttp://www.facebook.com/ezetop#!/group.php?gid=152627969572
ReplyDeleteஇப்போது இருக்கும் பல பதிவர்களைவிட நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள்.
ReplyDeleteதொழில்நுட்பம் மட்டுமே எழுதலாமே!
நன்றி பிரபு,தொழில்நுட்பம் மட்டும் தான் எழுதுகிறேன்,வடிவேலு காமெடி பீஸ் பகிர வேண்டிய செய்தியாக பட்டுச்சு.
ReplyDeleteநன்றி ஜெரி,ரோபோதமிழ்.
ReplyDeleteதங்கள் தொழில் நுட்பப் பதிவுகள் பயனுள்ளவை!
ReplyDelete'கிட்டி புல்லு'வா? கிட்டி புள் ஆ ? சரியான சொல்.
புள் என்றால் பறவை; அதையும் அடித்துப் பறக்கவைப்பதால்;
என் பாட்டா சொன்னார். சரியோ தவறோ அறியேன்; ஆனால் பொருத்தமாகப் பட்டது.
ரொம்பநாள் தேடலுக்கு ஒரு விடை கிடைத்தது உங்கள் பதிவில்.. நன்றி நண்பா
ReplyDeleteகிட்டிபுல்லு,கிட்டிபுள்ளு எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது,ஆனால் நீங்கள் அழகாக எடுத்து சொல்லிடீங்க.நீங்க சொல்லுவது போல தான் இருக்கும்.நன்றி யோகன்.மாற்றிவிடுகிறேன்.
ReplyDeleteநன்றி கவிதை காதலன்.அழகாக பெயரை தேர்தெடுத்துருகிங்க.
ReplyDeletevery good...thx..
ReplyDelete