8

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி - பாகம் 5


நம்மில் பலர் நம்ம தேவைக்கு தகுந்த மாதிரி இரண்டு அல்லது மூன்று ஜிமெயில் கணக்கு வைசுருப்போம். இப்பொழுது ஒரு ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்தவுடன் அந்த கணக்கில் இருந்து   வெளியே வந்தவுடன்தான் அடுத்த ஜிமெயில்  கணக்குக்குள்   நுழைய   முடியும். இது நமக்கு  சற்று  சிரமமாக
இருந்தது.  ஒவ்வொரு  முறையும்  Signout  பண்ணிவிட்டு அடுத்த கணக்குக்குள் நுழைய வேண்டும்.ஒரே கணக்கிலிருந்து மற்ற கணக்குக்குள் நுழைய முடியாதா என்று கேட்பவர்களுக்கு ஜிமெயில் ஒரு சூப்பர் வசதி  தந்துள்ளது. மிக  எளிமையாக  செய்யலாம்.
முதலில் சாதாரண Google search பக்கம் சென்று வலது ஓரம் இருக்கும் Sign in மூலமாக உங்கள் கணக்குக்குள் நுழைந்து கொள்ளுங்கள். 
 
                                   பிறகு Settings - Account settings கிளிக்  செய்யவும்.
 
 
                    பிறகு Multiple sign in பக்கத்தில் இருக்கும் Edit கிளிக் செய்யவும்.
 
 
 


                               படத்தில் உள்ளவாறு செய்து, Save கிளிக் செய்யவும். 
 Save செய்ததும் இது போல வரும்.Back கிளிக் செய்து Signout தந்து வெளியே   வந்து விடுங்கள்.வேலை முடிஞ்சுருச்சு.


 இப்பொழுது உங்க ஜிமெயில் கணக்குக்குள் சென்று பாருங்கள்,வலது ஓரமாக இருக்கும் உங்கள் கணக்கின் பெயருக்கு பக்கத்தில் உள்ள Dropdown யை கிளிக் செய்து பாருங்கள்.Sign in another Account என்று வந்திருக்கும்.அதை கிளிக் செய்தால் வேறு கணக்குக்குள் நுழைய முடியும்.இதுபோல் பல ஜிமெயில் கணக்குக்குள் நீங்கள் நுழையலாம்,   எந்த கணக்கிலிருந்தும் வெளியே வர வேண்டாம்.


                                          என்னங்க இது சூப்பர் வசதி தான...                           Do you like this story?

8 comments

 1. பயனுள்ள தகவல்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல்

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. very good message.. thanks for thamil kumar

  ReplyDelete
 5. கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

  ReplyDelete
 6. உண்மையிலேயே சூப்பர் வசதிதானுங்கோ

  ReplyDelete

Feeds

Blogger Widgets