இந்தியாவும் இலங்கையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வென்றதன் மூலமாக இந்திய அணி மிக தெம்பாக களம் இறங்க போகும் இறுதி போட்டி.இந்தியர்கள் அனைவரும் சனிகிழமை போட்டிக்காக ஆவலாக இருகிறார்கள்.இந்த வாய்ப்பை தவறவிட்டால்,இனிமேல் இதுமாதிரி ஒரு வாய்ப்பு உலககோப்பையை வெல்ல இந்தியாவிற்கு கிடைக்குமா என்றால், இல்லை
என்பதே பதிலாக இருக்க முடியும்.ஆட்டம் நடைபெறுவது இந்தியாவில்,அதுவும் மும்பையில்.(டெண்டுல்கரின் Homeground), இந்தியமக்களின் ஆதரவு,பொதுவாக நம் ஆட்டக்காரர்கள் சொந்த மண்ணில் அவ்வளவாக நம்மை ஏமாற்ற மாட்டார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்று நமக்கு நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளது.
அதேபோல் இலங்கை அணியும் நமக்கு கொஞ்சம் சவாலான அணிதான். Batsmans, Allrounders, Bowlersஎன்று நல்ல கலவையான அணி. தரங்கா, தில்ஷன்,சங்ககரா விக்கெட்டுகளை நாம் வீழ்த்திவிட்டால் வெற்றி எளிதாகும் என்பது உண்மை.அதேபோல் மலிங்கா தவிர Batsmanனை Attack செய்யும் பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதும் அவர்களுக்கு குறை தான். முரளிதரன்,மென்டிஸ் மும்பை பிட்சில் ஒன்னும் பண்ண முடியாது என்பது என் கணிப்பு.சமிந்தா வாஸ் இறுதி போட்டிக்கு இலங்கை அழைக்க போறாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு ...நீங்க யார வேணும்னாலும் கூட்டிட்டு வாங்கன்னுதான் நம்ம அணியினர் இருக்காங்க.

நம்முடைய அணிக்கு வந்தால், நெஹ்ரா இறுதி போட்டியில் இருக்க மாட்டார் என்றே தெரிகிறது,அது நமக்கு சாதகமா பாதகமா என்று சொல்லமுடியவில்லை.நம்முடைய Toporder Batsmans இலங்கைக்கு எதிராக நல்ல ஆடகூடியவர்கள்.தோனிகூட நாளைக்கு One - Down வந்து பார்க்கலாம். அதேபோல் குறிப்பாக சங்ககரா,ஜெயவர்தனே, தில்ஷனிடம் நம்முடைய Bowlerகள் கவனமாக பந்து வீச வேண்டும், இவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார்கள்.பில்டிங்கை பொறுத்த வரை நாம் பாகிஸ்தானிடம் சிறப்பாக செய்தோம்,அந்த Formமை அப்படியே தொடர்ந்தால் போதும்.நாளை போட்டியில் அஷ்வின் விளையாடுவார் என்றே தெரிகிறது.பதான்கூட நல்ல சாய்ஸ் தான்.முன்பு நடந்த போட்டிகளை வைத்து இலங்கை தானே என்று இருக்காமல், இன்றைக்கு நாம் நன்றாக விளையாட வேண்டும் என்று இந்திய அணி நினைத்தால், கண்டிப்பாக சொந்த மண்ணில் டெண்டுல்கர் உலககோப்பையுடன் ஞாயிற்றுகிழமை வரும் பேப்பர்களில் சிரித்து கொண்டிருப்பதை யாரும் தடுக்க முடியாது.
23 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி,பல போட்டிகளில் நம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பையை வென்று,கோப்பையை தோனி அவரிடம் தர போகும் அந்த தருணம்,நம் கண்களில் நம்மை அறியாமல் கொஞ்சம் கண்ணீர் வரும்.அந்த நெகிழ்ச்சியான தருணத்துக்காக அனைத்து இந்தியர்களும் தொலைக்காட்சி முன்பு சனிகிழமை தொலைந்து போவார்கள்.
ஏனென்றால் "Cricket is our Religion and Sachin is our God" and welcome to our Den srilanka.
ஏனென்றால் "Cricket is our Religion and Sachin is our God" and welcome to our Den srilanka.
உலககோப்பையை கையில் ஏந்த தயாராக இருங்க சச்சின்.
(இந்த பதிவுல ஒரு செண்டிமெண்ட் இருக்கு ,இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன் பதிவு எழுதினேன்,இந்தியா ஜெய்சுருச்சு....அந்த செண்டிமெண்ட் தொடரட்டும்.....எப்புடி!!!!!!!!)
//இந்த பதிவ ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது,இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன் பதிவு
ReplyDeleteஎழுதினேன்,இந்திய ஜெய்சுருச்சு....அந்த செண்டிமெண்ட் தொடரட்டும்.....எப்புடி!!!!!!!!) //
ரைட்டு :-)
//இந்த பதிவ ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது,இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன் பதிவு
ReplyDeleteஎழுதினேன்,இந்திய ஜெய்சுருச்சு....அந்த செண்டிமெண்ட் தொடரட்டும்.....எப்புடி!!!!!!!!) //
ஜெயிக்கிறோம்..... பகிர்வுக்கு நன்றிண்ணே :)