4

"All the Best (WIN)DIA" - ரசிகனின் பார்வையில் - கிட்டிபுள்ளு



 தற்செயலாக அமையும் சில விஷயங்கள் நமக்கு பெரும் சுவாரசியத்தை தரும், அதன்படி யாருமே எதிர்பாக்காத வகையில் இன்று இந்தியா - பாகிஸ்தானை அரையிறுதியில் சந்திக்கிறது.Footballக்கு பிரேசில் - அர்ஜென்டினா என்றால் கிரிக்கெட்டுக்கு இந்தியா -பாகிஸ்தான்.நிறைய பாகிஸ்தான் ரசிகர்கள் வாகா எல்லை வழியாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.ரெஹ்மான் மாலிக் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று தொழுகிறார்.நம்ம ஊரு காசி களைகட்டிருக்கிறது.நாம் ஜெயிக்க வேண்டி பூஜைகள் நடந்து கொண்டிரிக்கிறது.இந்த சமயத்துல நம்ம இந்திய மக்கள் சார்பாக எல்லா Playersகும் சில வார்த்தைகல சொல்ல வேண்டிருக்கு,ஏன்னா இன்றைய போட்டி நமக்கு கௌரவ பிரச்சன...



Sehwag -அய்யா நீங்க விளையாடும்போது நீங்க எப்ப  Out ஆவிகன்னு எதிரணி  நினைகிரான்களோ இல்லையோ,நாங்க  ஒரு வித பயத்துலயே பாக்குறோம், ஏன்னா நீங்க ஆடுற   "Selection of shots" அப்படி.  நீங்க 35 ஓவர் களத்துல இருந்தா இந்தியாவோட  ஸ்கோர் 300+, அதுனால இன்னைக்கு   மட்டும்  கொஞ்சம்  நின்னு விளையாடுங்க பாஸ்,உங்கள கெஞ்சி கேட்டுக்குறோம்.



Sachin - நீங்க தான் Senior. உங்களோட Experience கண்டிப்பாக இந்தியா அணிக்கு பெரிய Advantage.இன்றைக்கு எல்லா Playersகும் உங்களோட அறிவுரை தேவை.100வது செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.(நீங்க செஞ்சுரி அடிச்சா இந்தியா தோற்கும் என்று சொல்லுபவர்களுக்கு 1998 sharjahவில்
 ஆஸ்திரலியாக்கு எதிரான  ஆட்டத்தில் நீங்கள் ஆடிய ருத்ரதாண்டவம் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறன்.)




Gambir- இன்னைக்கு உங்களிடம் ஒரு செஞ்சுரி எதிர்பாக்கிறோம்.அதேபோல் எதிர்முனையில் இருப்பவர் எப்படி ஓடகூடியவர் ,"Running Between the wickets" என்று கணித்து ஓட துவங்குங்கள், Runout நீங்கள் ஆகவில்லை என்றால் நீங்கள் இப்பொழுது இருக்கும் Formமுக்கு  நீங்கள்   இந்தியாவிற்கு பெரிய தூண் தான்.


kohli - உங்கள் ஆட்டம், டிராவிட் இன்னும் சுறுசுறுப்பா  ஆடுனா எப்படி  இருக்கும் அப்படி இருக்கிறது , நீங்கள்  விளையாடும்போது  எங்களுக்கு  ஒரு நம்பிக்கை வருகிறது, அதனை   இன்றைய போட்டியுளும் காபாற்றிவிடுங்கள்.


yuvaraj-Battingகில் இல்லாமல் Bowlingகிலும் கலக்கிட்டு இருக்கீங்க ...ஆனா உங்க பௌலிங் பாகிஸ்தான் வீரகளிடம் எப்படி எடுபடும் என்று தெரிய வில்லை ...ஐந்தாவது வது "Man of the Match" வாங்க எங்களது வாழ்த்துக்கள்.





Dhoni - உங்கள்ட்ட கொஞ்சம்  பேச வேண்டிருக்கு பாஸ், நீங்க கடைசியா ஆடுன 20ஆட்டத்துல சொல்லிகொல்லும்படி ரன் அடிக்கல.Chase பண்ணும்போது உங்களோட Positionல  கண்டிப்பாக நிலைத்து நின்று ஆட வேண்டும்,ஆனா அதை நீங்க செய்றீங்கலான்னு நீங்களே Dressing Room  கண்ணாடி முன் நின்று கேட்டு பார்த்துகோங்க  .கண்டிப்பா  இன்றைக்கு  உங்களுக்கு   பெரிய "பிரஷர்"  இருக்கும் என்பது உண்மை .Homeground  Advantage + நாங்க இருக்கோம் பாஸ் சும்மா   கலக்குங்க..."ஆல் தி பெஸ்ட் Mr Cool" .

Raina  - இன்றைக்கு நம்ம Chase செய்தா,  நீங்க தான் Winning shot அடித்து Match  Finish பண்ணுவிங்கன்னு நினைக்கிறோம்.ஆஸ்திரேலியாகூட நீங்க நிக்கலனா ,India Out of the World Cup தான்.Fieldingகில் 20 ரன் Save பண்ணுவீங்கன்னு நினைக்கிறோம்.


Harbhajan - சிங்கு நீங்க நல்ல Bowler தான்.ஆனா நீங்க ரன்ன control பண்ணுற அளவுக்கு விக்கெட் எடுக்கவில்லை என்பது எங்களது கருத்து.Onedayபோட்டிகளில் விக்கெட் மிகவும் முக்கியம்.ரன்ன Control  Yuvraj,Raina கூட பண்ணுவார்கள்.அதேபோல் முதலில் பேட் செய்யும் போது சரி,சேஸ் செய்யும் போதும் சரி  நீங்கள் வரும் Positionனில் கொஞ்சம் நின்று 30 ரன் அடித்து தந்தால் கூட நம் அணிக்கு அது பேருதவியாக இருக்கும்.


Zaheer - இந்தியாவிற்கு இந்த உலக கோப்பையில் Consistent Fast bowler நீங்க தான்.Early wicketsசை நீங்கள் கை பற்றினால் பாகிஸ்தான் 200 -220 குள் சுருண்டு விடும் .Husseyக்கு வீசுன  Ball மாதிரி எதிரணியை திணறடிக்க கூடிய பால்களை வீசுவதில் கெட்டிக்காரர்.தொடரட்டும் உங்கள் சேவை.

Ashwin - "Carrom ball Ashwin" உங்களுக்கு வந்திருக்கும் புது பெயர்.ஆஸ்திரேலியா எதிராக, முதல் ஓவர்  உங்களை   பந்து வீச
அழைத்த டோனி உங்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார் பாருங்கள் ...கண்டிப்பாக அந்த நம்பிகையை இந்த போட்டியிலும் தக்க வைத்து கொள்ளுங்கள்.ஹர்பஜன் மாதிரி இல்லாமல் விக்கெட் எடுப்பது எங்களுக்கு பெரிய ஆறுதல்.

Munaf/Nehra - பாஸ் நீங்க ரெண்டு பேரும் ஏன் இந்திய அணிக்குள் இருக்கீங்க ...கண்டிப்பா எங்களுக்கு பதில் சொல்லியே ஆகணும்.நீங்க ரெண்டு பேரும் 10 ஓவர் போடுறீங்க 50 ரன் தந்து 1 அல்லது  ,2 விக்கெட் எடுக்குறீங்க ,அதுவும் bowler விக்கெட்ஸ்.இதே வேலைய பதான் செஞ்சுட்டு போய்டுவாரு நம்ம அணிக்கு ஒரு batsman ஆச்சும் கிடைக்கும்.நாங்க கேக்குறது நியாயமா இல்லையா...நியாயம் இல்லன்ன கொஞ்சம் நல்லா பௌலிங் போடுங்க இன்னைக்கு.Seemers pitch ,Grassy wicketன்னு சொல்றாங்க, கண்டிப்பா உங்க ரெண்டு பேருல ஒருத்தர் இருப்பீங்க ...ப்ளீஸ் கொஞ்சம் பார்த்து போடுங்க பாவம் நாங்க.(முக்கியமா Four Sixசுன்னு உங்க ஓவர்ல அடிக்கும் போது ரெண்டு பேரும் சிரிக்காதிங்க...அத பாக்க முடியல ).


ஆக சொல்ல வேண்டியதெல்லாம் கொஞ்சம் சொல்லிட்டோம்...டோனி ராசி,Homeground advantage ,ஆஸ்திரேலியாவ ஜெயித Confident ,worldcup sentiment என்று எல்லாம் நம்ம பக்கம் நிறைய விஷயங்கள் ஆறுதலா இருக்கு.அதேபோல பாகிஸ்தான குறைச்சு எடை போட முடியாது. எல்லார்கிட்டயும் தோற்றாலும் ,நம்ம கிட்ட மட்டும் அவர்களுக்கு எங்கேந்து வருமோ அந்த வெறி. ஆனா இன்னைக்கு உங்களால ஒன்னும் பண்ண முடியாது என்றே நினைக்கிறோம்.So All the best ( WIN )DIA.















Do you like this story?

4 comments

  1. same feeling ............

    ReplyDelete
  2. தோனியோட Cool Captainship,Bowlerகள பயன்படுத்துன அவரோட தெளிவு,நெஹ்ரா முனாப்பின் நல்லா "Line and Length",நமக்கு வெற்றிய கொண்டு வந்துருக்கு.சச்சினுக்காக இந்த உலக கோப்பைய நம்ம ஜெய்சே ஆகணும் .சச்சின் world cup கைல வைச்சுகிட்டு நிக்கணும். இதான் இப்ப ஒவ்வொரு இந்தியனோட ஆச.Best wishes for winning the world cup.

    ReplyDelete
  3. பாஸ் நீங்க சொன்ன அட்வைஸ் இந்திய டீம் ஆளுங்க உங்க ப்ளோகில் படிச்சு தாங்களோ! இந்திய வின் தி மேட்ச்
    குட் ப்ளாக் !
    சுபெர்ப் ......................

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator