6

யான்டெக்ஸ் என்னும் ஓர் ஈமெயில் சேவை..(Yandex.com)








அனைவருக்கும் வணக்கம்..டெக்னாலஜி பதிவு எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது என்பதால் மீண்டும் ஒரு டெக் பதிவுடன் சந்திக்கிறேன்...

யான்டெக்ஸ் மெயில்:


நம்மில் பலர் பெரும்பாலும் ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயிலில் தங்கள் ஈமெயில் முகவரிகளை வைத்திருப்போம். அதே போல் மேலும் ஒரு நல்ல தளம் இலவச ஈமெயில் சேவையை  நமக்கு அளிக்கிறது. அந்த தளத்தின் பெயர் "Yandex.com".இந்த தளம் ரஷ்யாவில் இருந்து செயல்படுகிறது. ரஷ்யாவில் யான்டெக்ஸ் (Yandex)  கூகிளை விட
பிரபலமாம், ஆனால் மற்ற நாடுகளில் "யான்டெக்ஸ்" இன்னும் அவ்வளவாக பிரபலமடையவில்லைமுதலில்  தயக்கத்துடன்  பயன்படுத்தி பார்த்தேன், உண்மையில் "யான்டெக்ஸ்" ஒரு சூப்பர் ஈமெயில் தளம். மிக நேர்த்தியான வடிவைமைப்பு மற்றும் பல நல்ல பயன்பாடுகள் நிறைந்து உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமடையவில்லை என்பதால்  நிறைய நபர்களின் பெயர்கள் பயனர்பெயர்(Username) பயன்பாட்டில்  இருக்கும் என்று நினைக்கிறன்.ஒரு பெர்சனல் ஈமெயில் கணக்காக இந்த ஈமெயில் சேவையை பயன்படுத்திபாருங்கள். நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.

கவர்ந்தவை.

1.ஈமெயில் டெலிவரி நோடிபிகேஷன்.(Email delivery notification)



2.அழகான வடிவைமைப்பு.(Look and feel)

3.நல்ல தீம்கள்.(Better themes)



.4.வேறு ஈமெயில் கணக்கில் இருக்கும் நம் மெயில்களை இங்கிருந்து படிக்கலாம்.(Embedded email )



5.உங்களது ஈமெயில் கணக்கு ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் வடிவமைக்கபட்டுள்ளது.(Spamoborana technology)



6.ஈமெயில் எழுதும்போது இருக்கும் UNDO-REDO செய்முறை.(ஜிமெயிலில் இருக்கிறதா என்று தெரியவில்லை).

7. உங்களுக்கு தேவையான பட்டன்களை நீங்களே வடிவமைத்து கொள்ளலாம்.(Your personal button option –Very useful)



8.வேகம் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் உள்ளது.







யான்டெக்ஸ் ஈமெயில்
 சேவையில் மட்டுமில்லாமல் தேடுபொறி (Search engine) சேவையிலும் உள்ளது. தேடுபொறி பயன்பாட்டில் யான்டெக்ஸ் உலகத்தில்  நான்காவது இடத்தில இருக்கிறது என்றாலும் கூகிளை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறது. ரஷ்யாவை தவிர மற்ற நாடுகளிலும் யான்டெக்ஸின் வளர்ச்சி அதிகமானால் அதன் செயல்திறனை யாண்டெக்ஸ் மேலும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.



ஈமெயில் தளம் : YANDEXMAIL

தேடுபொறி தளம் : http://www.yandex.com/

யான்டெக்ஸ் பற்றிய மேலும் தகவல்களுக்கு : http://techcrunch.com/tag/yandex/

அறிமுக ஆண்டு :September 23, 1997

நாடு : ரஷ்யா.

ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் : பேலாருஸ் ,ரஷ்யா ,கசகஸ்தான். உக்ரைன்,துருக்கி.

பெயர் விரிவாக்கம்  : YANDEX ( Yet Another iNDEXer)

ஓனர்  : Arkady Volozh


மேலும் ஒரு நல்ல பதிவு மூலம் சந்திக்கிறேன்…

Do you like this story?

6 comments

  1. பயன்படுத்திப் பார்க்கிறேன்... விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. கணக்கு தொறந்தாச்சு

    ReplyDelete
  3. Try பண்ணேன்... சூப்பர். ஒரு மெயில் அக்கவுன்ட் ஆரம்பிச்சாச்சு.. நன்றி

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator