நாம் அனைவரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிராகரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்((குறிப்பாக சொந்த பந்தங்கள் :))).இந்த சூழலை கையாள பேஸ்புக் நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டு வந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது. நீங்கள் பப்ளிக்(Public) என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும். இதனால் நமக்கு எந்த சேதமும் வராது :))
இதனை செயல்படுத்த
நண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று
Facebook profile >>>Friends drop-down >>>choose the “Add to Another List”>>> select "Restricted"
No comments